CWC 2023 : சிஎஸ்கே கோட்டையில் அசத்த மாட்டேனா.. அதை சொன்னா ஸ்மித் உஷாராகிடுவாரு.. ஜடேஜா பேட்டி

Ravindra Jadeja 2
- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 2011 சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுமாராக விளையாடிய வெறும் 199 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணிக்கு மேக்ஸ்வெல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 200 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் சர்மா, இஷான் கிசான், ஸ்ரேயாஸ் ஆகிய 3 முக்கிய பேட்ஸ்மேன்களும் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

ஸ்மித்தின் ரகசியம்:
அதனால் 2/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற தடுமாறிய இந்தியாவை மிடில் ஆர்டரில் களமிறங்கி 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு செங்குத்தாக தூக்கி நிறுத்திய விராட் கோலி 85 ரன்களும் கேஎல் ராகுல் 97* ரன்களும் அடித்து வெற்றி பெற வைத்தனர். அந்த வகையில் இப்போட்டியில் 97 ரன்கள் அடித்த ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றாலும் 3 விக்கெட்களை எடுத்த ஜடேஜா கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றே சொல்லலாம்.

அதிலும் உலகின் தரமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் ஸ்டீவ் ஸ்மித்தை மேஜிக் பந்தால் அவர் க்ளீன் போல்ட்டாக்கியது விராட் கோலி உட்பட அனைவரையும் ஆச்சர்யத்தில் வாழ்த்தியது. அதை விட அவரை மொத்தம் 18 முறை அவுட்டாக்கியுள்ள ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்மித்தை அதிக முறை அவுட்டாக்கிய பவுலர் என்ற சாதனையும் படைத்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னையின் கோட்டையாக இருக்கும் சேப்பாக்கத்தில் விளையாடிய அனுபவம் இப்போட்டியில் அசத்த உதவியதாக ஜடேஜா கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் ஸ்மித்தை தடுமாற வைக்கும் ரகசியத்தை பற்றி சொல்ல மாட்டேன் என்று வெளிப்படையாக கூறிய அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே அணிக்காக விளையாடும் எனக்கு இங்கு விக்கெட்டுகளை எப்படி எடுக்க வேண்டும் என்பது தெரியும். குறிப்பாக பிட்ச்சை பார்த்ததும் 3 – 4 விக்கெட்டுகளை எடுப்பேன் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் எந்த பந்து சுழலும் என்பது தெரியாவிட்டாலும் வேகத்தை மாற்றி வீசுவது என்னுடைய வேலையாகும்”

இதையும் படிங்க: வீடியோ : மாஸ் பிஜிஎம்.. தல தோனி மட்டுமல்ல கிங் கோலி எண்ட்ரியையும்.. கொண்டாடிய தமிழக ரசிகர்கள்

“மேலும் ஸ்மித்தை அவுட்டாக்கியதை பற்றி நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் நீங்கள் அதை ஆங்கிலத்தில் அச்சடித்து செய்தித்தாளில் போடுவீர்கள். அதை அவர் புரிந்து கொள்வார் என்பதால் நான் சொல்ல மாட்டேன். இருப்பினும் பந்தை ஸ்டம்ப் லைனில் வீசுதே என்னுடைய திட்டமாக இருக்கும். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளைப் போல வீசிய எனக்கு ஸ்மித்துக்கு எதிரான பந்து அதிர்ஷ்டவசமாக சற்று அதிகமாக சுழன்றது! என்று கூறினார்.

Advertisement