IPL 2023 : சிரிக்குறேன்னு நினைக்காதீங்க, சிஎஸ்கே ரசிகர்களால் மன உளைச்சலில் இருக்கேன் – ஜடேஜா ஆதங்கம், நடந்தது என்ன

Jadeja
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்து கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அந்த அணி 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2வது வெற்றிகரமான அணியாக ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாகவும் இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பையை வென்று கொடுத்த மகத்தானவராகவும் தோனி ஏற்கனவே 2020இல் சர்வதேச அளவில் ஓய்வு பெற்று விட்டதால் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

அதனால் வருடத்திற்கு ஒருமுறை அவர் விளையாடுவதை ஏராளமான ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர். அதற்கேற்றார் போல் சமீப காலங்களில் தடுமாறினாலும் இந்த சீசனில் ஆரம்பம் முதலே கடைசி கட்டத்தில் களமிறங்கி அதிரடியான சிக்சர்களைப் பறக்க விட்டு நல்ல ஃபினிஷிங் கொடுத்து வெற்றிகளில் பங்காற்றி வரும் தோனி 41 வயதிலும் அட்டகாசமாக செயல்பட்டு தன்னை சாம்பியன் வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறார். அதனால் பெரும்பாலான ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அவர் சற்று முன்கூட்டியே களமிறங்குவதை விரும்புகின்றனர்.

- Advertisement -

மன உளைச்சலில் ஜடேஜா:
இருப்பினும் முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் அவர் இதர வீரர்களுக்கு வழி விட்டு கடைசியில் ஓரிரு பந்துகளை மட்டும் எதிர்கொள்ளும் வகையில் விளையாடி வருகிறார். ஆனால் பெரும்பாலான சமயங்களில் சிக்சர்களை அடித்து விருந்து படைக்கும் அவருடைய பேட்டிங்கை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் பணத்தை செலவழித்து மைதானத்திற்கு வருகின்றனர். அந்த நிலையில் 10 – 15 ஓவர்கள் தாண்டியதுமே சென்னை அணி சிறப்பாக விளையாடுகிறதோ இல்லையோ ஸ்கோர் வலுவாக இருக்கிறதோ இல்லையோ தோனி களமிறங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.

சொல்லப்போனால் எப்படியாவது தோனி பேட்டிங் செய்வது பார்த்து விட வேண்டும் எண்ணத்தை கொண்டுள்ள ரசிகர்கள் அவருக்கு முன்பாக ஜடேஜா பேட்டிங் செய்யும் போது சீக்கிரம் அவுட்டாகுங்கள் அல்லது முதல் பதியிலேயே அவுட்டாகி செல்லுங்கள் என்று வெளிப்படையாகவே பேனர்களில் எழுதி வைத்து கோரிக்கை வைக்கிறார்கள். இருப்பினும் குருட்டுத்தனமான பாசத்தால் ரசிகர்கள் அவ்வாறு செய்வது நிச்சயமாக முழுமூச்சுடன் தனது அணிக்காக விளையாடும் எந்த வீரருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

ஏனெனில் எந்த அணிக்காக விளையாடும் வீரர்களுக்கும் ரசிகர்களின் ஆதரவும் ஆரவாரமும் தான் மிகப்பெரிய உந்துதலாக இருந்து சிறப்பாக செயல்பட உதவும். அப்படிப்பட்ட நிலையில் தோனி பேட்டிங் செய்வதை பார்க்க வேண்டும் என்பதால் அவுட்டாக வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுவதாலையோ என்னவோ தெரியவில்லை இந்த சீசனில் இதுவரை பேட்டிங்கில் அனலை தெறிக்க விடும் அளவுக்கு ஜடேஜா அசத்தவில்லை. ஆனாலும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் டெல்லிக்கு எதிரான கடந்த போட்டி உட்பட இந்த சீசனில் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்று சென்னையின் வெற்றிகளில் கருப்பு குதிரையாகவே செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியின் முடிவில் “தோனிக்கான ரசிகர்களின் ஆரவாரங்களை நான் தொடர்ந்து கேட்டேன். குறிப்பாக நான் மேல் வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது அவர்கள் என்னை அவுட்டாவதை விரும்புகிறார்கள். இருப்பினும் எங்களுடைய அணி வெல்லும் வரை அவ்வாறு நடப்பது எனக்கு மகிழ்ச்சியே” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

- Advertisement -

அதைப் பார்த்த ஒரு ரசிகர் “இதை சிரித்துக் கொண்டே ஜடேஜா கூறினாலும் உள்ளுக்குள் மிகப்பெரிய வலியை இருக்கும். குறிப்பாக உங்களுடைய அணி ரசிகர்களே உங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் உங்களது விக்கெட்டுக்காக காத்திருக்கிறார்கள். மேலும் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றும் அவர் விமர்சனங்களை சந்திக்கிறார். ஜடேஜா நீங்கள் சென்னையின் இளவரசர்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:IPL 2023 : இதுக்குமேல என்ன வேணும். உடனடியா அவரை இந்திய அணியில் சேருங்க – பிரெட் லீ கருத்து

அந்த ட்வீட் வைரலான நிலையில் வெளியே சிரித்தாலும் சென்னை ரசிகர்களால் உள்ளுக்குள் மன உளைச்சலில் இருக்கிறேன் என்ற வகையில் ரவீந்திர ஜடேஜாவும் லைக் செய்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதை பார்க்கும் இதர ரசிகர்கள் என்னதான் இருந்தாலும் சிஎஸ்கே ரசிகர்கள் இவ்வாறு செய்யக்கூடாது என்று அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement