IPL 2023 : இதுக்குமேல என்ன வேணும். உடனடியா அவரை இந்திய அணியில் சேருங்க – பிரெட் லீ கருத்து

Lee
- Advertisement -

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை அவர்களது சொந்த மைதானத்தில் எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் தற்போது முன்னேற்றத்தை கண்டுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழந்து 149 ரன்கள் அடித்தது.

அதன்பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 13.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 151 ரன்கள் குவித்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை விளையாடிய துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 47 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 98 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் காரணமாகவே ராஜஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

அதோடு இந்த போட்டியில் சேசிங்கின் போது முதல் இரண்டு பந்துகளை சிக்சர் விளாசிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது இந்த அதிரடியான ஆட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் தற்போது ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ-யும் அவரது ட்விட்டர் பக்கத்தில் தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு அவரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : மலிங்காவின் தனித்துவ ஐபிஎல் சாதனையை தூளாக்கி – உலக அளவில் சிறப்பான சாதனை படைத்த சஹால்

அந்த வகையில் பிரட் லீ அவரது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது : “வாவ், யாஷஸ்வி ஜெய்ஸ்வால்”, “சீக்கிரம் அவரை இந்திய அணிக்குள் கொண்டு வாருங்கள்” என பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அந்த பதிவினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement