IPL 2023 : மலிங்காவின் தனித்துவ ஐபிஎல் சாதனையை தூளாக்கி – உலக அளவில் சிறப்பான சாதனை படைத்த சஹால்

Chahal
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 11ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 56வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 149/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 57 (42) ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக யுஸ்வென்ற சஹால் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

அதை தொடர்ந்து 150 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் 0 (3) ரன்களில் டக் அவுட்டானாலும் கேப்டன் நிதிஷ் ராணா வீசிய முதல் ஓவரிலேயே வரலாற்றில் அதிகபட்சமாக 26 ரன்களை வெளுத்து வாங்கி 13 பந்துகளில் 50 ரன்கள் தொட்டு அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்த யசஸ்வி ஜெய்ஸ்வால் கடைசி வரை அவுட்டாகாமல் சதத்தை நழுவ விட்டாலும் 12 பவுண்டரி 5 சிகாருடன் 98* (47) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது பங்கிற்கு 2 பவுண்டரி 5 சிக்சருடன் 48* (29) ரன்கள் எடுத்ததால் 13.1 ஓவரிலேயே 151/1 ரன்களை எடுத்த ராஜஸ்தான் அதிரடியாக வெற்றி பெற்றது.

- Advertisement -

தனித்துவ சாதனை:
அந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 98* ரன்களை விளாசிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருதையும் அதிரடியாக விளையாடியதால் அனைவரது பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். ஆனால் பந்து வீச்சில் வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உட்பட 4 ஓவரில் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்த சஹால் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தி ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர் (187*) என்ற ப்ராவோவின் (183) சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு இதே ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மும்பை அணிக்காக கொல்கத்தாவுக்கு எதிராக அறிமுகமாகி நாளடைவில் பெங்களூருருக்காக நிறைய வருடங்கள் விளையாடி இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் தற்போது வெள்ளை பந்து கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக இருந்து வருகிறார். மேலும் ஃபார்மை இழந்து தடுமாறிய போது கடந்த வருடம் ராஜஸ்தான் அணியில் முதல் முறையாக விளையாடி ஹாட்ரிக் உட்பட அதிக விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்ற அவர் இந்த வருடமும் இதுவரை 21* விக்கெட்டுகளை எடுத்து மீண்டும் ஊதா தன்வசமாக்கியுள்ளார்.

- Advertisement -

அந்த நிலையில் 2015, 2016, 2020, 2022, 2023* ஆகிய சீசன்களில் முறையே 23, 21, 21, 27, 21* என 5 சீசன்களில் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ள சஹால் ஐபிஎல் வரலாற்றில் அதிக சீசன்களில் 20க்கு மேற்பட்ட விக்கெட்களை எடுத்த பந்து வீச்சாளர் என்ற தற்போது தனது அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஜாம்பவான் லசித் மலிங்காவின் சாதனையை உடைத்து புதிய தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் மும்பை அணிக்காக விளையாடிய மலிங்கா 2011, 2012, 2013, 2015 ஆகிய வருடங்களில் முறையே 28, 22, 20, 24 என 4 சீசன்களில் அதிகபட்சமாக 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

அத்துடன் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிராக 4/23, இங்கிலாந்துக்கு எதிராக 6/25, இலங்கைக்கு எதிராக 4/52 என இதற்கு முன் 3 முறை ஒரு போட்டியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிராக 4/25, மும்பைக்கு எதிராக 4/38, லக்னோவுக்கு எதிராக 4/41, கொல்கத்தாவுக்கு எதிராக 5/40, ஹைதராபாத்துக்கு எதிராக 4/17, மீண்டும் ஹைதராபாத்துக்கு இந்த சீசனில் 4/29, நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக 4/25 என 7 முறை ஒரு போட்டியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க:RR vs KKR : செஞ்சுரி பத்தி யோசிக்கல. நான் யோசிச்சது எல்லாம் இது மட்டும் தான் – ஆட்டநாயகன் ஜெய்ஸ்வால் பேட்டி

இதன் வாயிலாக ஒட்டுமொத்த உலக டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் 10 முறை ஒரு போட்டியில் 4 விக்கெட்களை எடுத்த முதல் பவுலர் என்ற மற்றுமொரு தனித்துவமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Advertisement