வெற்றியை உறுதி செய்வதோடு சேர்த்து 3 ஆம் நாளில் ரவீந்திர ஜடேஜா நிகழ்த்தவுள்ள சம்பவம் – விவரம் இதோ

Jadeja
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இரண்டாம் நாள் முடியவிலேயே சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி நடைபெற்று வரும் இந்த முதல் போட்டியில் டாஸ் வென்று தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 246 ரன்களுக்கு சுருண்டது.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை என்கிற ஆரோக்கியமான நிலையில் உள்ளது.

- Advertisement -

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ரவீந்திர ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் பட்டேல் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியின் போது இந்திய அணிக்காக பின் வரிசையில் களமிறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரவீந்திர ஜடேஜா இதுவரை 155 பந்துகளை சந்தித்து 81 ரன்கள் குவித்துள்ளார்.

இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இப்படி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ள அவர் மேலும் நாளைய 3-ஆம் நாள் ஆட்டத்திலும் பேட்டிங் செய்ய உள்ளதால் நிச்சயம் எஞ்சியுள்ள 19 ரன்களையும் பூர்த்தி செய்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நான்காவது சதத்தை நிறைவு செய்வார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

ஒருவேளை அப்படி ஜடேஜா சதத்தினை பூர்த்தி செய்யும் செய்தால் நிச்சயம் இந்திய அணி 250 ரன்கள் வரை முன்னிலை பெற பிரமாதமான வாய்ப்பு காத்திருக்கிறது. அதோடு இந்திய ஆடுகளங்களில் 250 ரன்கள் எல்லாம் முன்னிலை பெற்றால் நிச்சயம் அந்த ரன்களேயே எதிரணியால் எட்ட முடியாது.

இதையும் படிங்க : 33 ஃபோர்ஸ் 21 சிக்ஸ்.. 323 ரன்ஸ்.. சாஸ்திரி, சேவாக்கை மிஞ்சிய இந்திய வீரர்.. வெறித்தனமான உலக சாதனை

அதன் காரணமாக இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றியும் நாளை பிரகாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று பலமான இந்திய அணி கடந்த 12 ஆண்டுகளாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததே இல்லை என்ற கவுரவத்தையும் தக்கவைக்க இந்த வெற்றி உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement