33 ஃபோர்ஸ் 21 சிக்ஸ்.. 323 ரன்ஸ்.. சாஸ்திரி, சேவாக்கை மிஞ்சிய இந்திய வீரர்.. வெறித்தனமான உலக சாதனை

- Advertisement -

இந்தியாவின் புகழ்பெற்ற ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஜனவரி 26ஆம் தேதி தெலுங்கானாவில் நடைபெற்ற 75வது லீக் போட்டியில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அருணாச்சலப் பிரதேசம் சுமாராக விளையாடி 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக டெச்சி டோரியா 97* ரன்கள் எடுக்க ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக சாமா மெலிந் மற்றும் கார்த்திகேயா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்கள் தன்மய் அகர்வால் மற்றும் கேப்டன் ராகுல் சிங் ஆகியோர் அதிரடியாக விளையாடி வேகமாக ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

சூறாவளி ஆட்டம்:
குறிப்பாக அருணாச்சலப் பிரதேச பவுலர்கள் சுமாராக பந்து வீசுவதை ஆரம்பத்திலே கணித்த அந்த ஜோடியில் ராகுல் சிங் ஒருபுறம் அதிரடியாக விளையாட தன்மய் அகர்வால் மறுபுறம் முரட்டுத்தனமாக அடிக்க துவங்கினார். அவர்களின் அதிரடியில் முதல் 81 பந்துகளில் 100 ரன்கள் அடித்த ஹைதராபாத் அடுத்த 61 பந்துகளில் 200 ரன்கள் அதற்கடுத்த 40 பந்துகளில் 300 ரன்கள் வெளுத்து வாங்கியது.

அப்போதும் ஓயாத அந்த ஜோடி அதற்கடுத்த 41 பந்துகளில் தங்களுடைய அணி 400 ரன்கள் தாண்டுவதற்கு உதவியது. அந்த வகையில் எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் துவம்சம் செய்த இந்த ஜோடி 40.2 ஓவரில் 449 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போது ஒரு வழியாக கேப்டன் ராகுல் சிங் 26 பவுண்டரி 3 சிக்சருடன் சதமடித்து 185 (105) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் அவருடன் எதிர்புறம் கொஞ்சமும் ஓயாமல் முரட்டுத்தனமாக அடித்த தன்மய் அகர்வால் 119 பந்துகளில் 200 ரன்கள் தொட்டு முதல் தர கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் 1985இல் ரவி சாஸ்திரி பரோடாவுக்கு எதிராக 123 பந்தில் அடித்ததே முந்தைய சாதனையாகும். நேரம் செல்ல சூறாவளி வேகத்தில் எதிரணி பவுலர்களை அடித்த அவர் 147 பந்துகளிலேயே 300 ரன்கள் அடித்தார். இதன் வாயிலாக ஜாம்பவான் வீரேந்திர சேவாக்கையெல்லாம் மிஞ்சி ஒட்டுமொத்த உலகிலேயே முதல் தர கிரிக்கெட்டில் அதிவேகமாக முச்சதம் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை தன்மய் அகர்வால் படைத்தார். இதற்கு முன் 2017ஆம் ஆண்டு ஈ ப்ரோவின்ஸ் அணிக்கு எதிராக பார்டர் அணிக்காக மார்க்கோ மாரிஸ் 191 பந்துகளில் முச்சதம் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 123 பந்துகளில் 86 ரன்கள்.. எங்களோட திட்டமே இதுதான்.. 2ஆம் நாள் ஆட்டம் முடிந்து பேசிய – கே.எல் ராகுல்

அத்துடன் முதல் தர கிரிக்கெட்டில் முதல் நாளில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இதற்கு முன் இலங்கைக்கு எதிராக 2009இல் சேவாக் 284 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த வகையில் இறுதிவரை அவுட்டாகாமல் இருக்கும் அவர் 33 பவுண்டர் 21 சிக்ஸருடன் 323* (160) ரன்களை அடித்துள்ளதால் முதல் நாள் முடிவில் ஹைதராபாத் 529/1 ரன்கள் குவித்துள்ளது.

Advertisement