123 பந்துகளில் 86 ரன்கள்.. எங்களோட திட்டமே இதுதான்.. 2ஆம் நாள் ஆட்டம் முடிந்து பேசிய – கே.எல் ராகுல்

KL-Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஜனவரி 25-ஆம் தேதி ஐதராபாத் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதல் இன்னிங்க்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் போட்டியின் முதல் நாள் அன்று 246 ரன்களில் சுருண்டது.

அதனைத்தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் என்கிற பிரம்மாண்ட ரன் குவிப்பை வழங்கி உள்ளது. அதோடு இங்கிலாந்து அணியை விட தற்போது இந்திய அணி 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதன் காரணமாக நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இன்றைய ஆட்டநேர முடிவில் ரவீந்திர ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் 123 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர் என 86 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்து பேசிய கே.எல் ராகுல் கூறுகையில் : தென் ஆப்பிரிக்கா மண்ணில் நான் அடித்த சதம் எனக்கு நல்ல நம்பிக்கையை தந்தது. அதோடு காயத்திற்கு பிறகு நான் மீண்டும் அணிக்குள் வந்து 6-7 மாதங்களாக மிகச் சிறப்பாக விளையாடியதாகவே உணர்கிறேன். அதேபோன்று எப்பொழுதுமே பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் ஒரு பாசிட்டிவான எண்ணத்துடன் விளையாடி வருகிறேன்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா மைதானத்தை விட இந்திய மைதானங்கள் மிகவும் வித்தியாசமானவை. இன்றைய போட்டியில் பந்து நன்றாக திரும்பியது. அதோடு பந்து மெதுவாக வந்ததால் என்னுடைய வாய்ப்பை பயன்படுத்தி ரன் குவிக்க முயற்சித்தேன். அந்த வகையில் இன்றைய போட்டியில் நான் விளையாடிய விதம் உண்மையிலேயே திருப்தி அளிக்கிறது.

இதையும் படிங்க : அறிமுகப்போட்டியிலேயே இப்படியா அடிப்பீங்க.. மோசமான சாதனைக்கு ஆளான இங்கிலாந்து பவுலர் – விவரம் இதோ

இரண்டாம் நாள் ஆட்டத்தில் எங்களுடைய திட்டம் என்னவெனில் : இன்றைய நாள் முழுவதும் விளையாடி எவ்வளவு ரன்கள் சேர்க்க முடியுமோ அவ்வளவு ரன்களை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். அதுதான் எங்களது அணியின் திட்டமாகவும் இருந்தது. அந்த வகையில் இரண்டாம் நாள் முடிவில் போதிய ரன்களை எட்டி விட்டதாக நினைக்கிறேன். இருப்பினும் இது ஒரு பெரிய போட்டி எனவே இன்னும் எங்களால் எவ்வளவு ரன்களை எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு ரன் குவிப்போம் என கே.எல் ராகுல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement