அறிமுகப்போட்டியிலேயே இப்படியா அடிப்பீங்க.. மோசமான சாதனைக்கு ஆளான இங்கிலாந்து பவுலர் – விவரம் இதோ

Tom-Hartley
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து தங்களது முதல் இன்னிங்சில் 246 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோ 37 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக ஜடேஜா மற்றும் அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இங்கிலாந்து விட 175 ரன்கள் முன்னிலை பெற்று தற்போதே வலுவான நிலையை எட்டியுள்ளது.

அதன் காரணமாக நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லி 25 ஓவர்கள் பந்துவீசி 131 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இந்த போட்டியில் என்னதான் அவர் இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் அறிமுக போட்டியின் முதல் இன்னிங்சிலேயே 100 ரன்களுக்கு மேல் அவர் வாரி வழங்கியது அவரை ஒரு மோசமான சாதனைக்கும் தள்ளியுள்ளது. அந்த வகையில் அறிமுக வீரராக முதல் இன்னிங்சிலேயே 100 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த இங்கிலாந்து பவுலர்களின் பட்டியலில் இவரது பெயரும் இணைந்துள்ளது.

இதையும் படிங்க : 64/5 என சரிந்த பின்பும் மாஸ் கம்பேக்.. ட்விஸ்ட் வைத்த ஆஸி.. 24/4 என தெறிக்க விடும் வெ.இ.. சாதனை படைக்குமா?

அதேபோன்று இவரது பந்துவீச்சை டார்கெட் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஓவருக்கு சராசரியாக 5.20 ரன்கள் என அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement