64/5 என சரிந்த பின்பும் மாஸ் கம்பேக்.. ட்விஸ்ட் வைத்த ஆஸி.. 24/4 என தெறிக்க விடும் வெ.இ.. சாதனை படைக்குமா?

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு 2 போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் 2வது போட்டி ஜனவரி 25ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருக்கும் புகழ்பெற்ற காபா மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 4, தக்நரேன் சந்தர்பால் 21, கிர்க் மெக்கன்சி 21, அலிக் அதனேஷ் 8, ஜஸ்டின் க்ரீவ்ஸ் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே மிட்சேல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் வேகத்தில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 64/5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் கண்டிப்பாக 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

போராடும் வெஸ்ட் இண்டீஸ்:
ஆனால் அப்போது ஜோடி சேர்ந்த ஜோஸ்வா டா சில்வா மற்றும் காவெம் ஹோட்ஜ் ஆகியோர் நங்கூரத்தை போட்டு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த வகையில் 6வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கிய இந்த ஜோடியில் டா சில்வா அரை சதமடித்து 79 ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஹோட்ஜ் தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து 71 ரன்கள் குவித்து அவுட்டானார்.

அந்த நிலையில் அடுத்ததாக வந்த டெயில் எண்டர் கெவின் சின்க்ளைர் தம்முடைய பங்கிற்கு நங்கூரத்தை போட்டு அரை சதம் கடந்து 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் விளையாடிய அல்சாரி ஜோசப் கடைசி நேரத்தில் அதிரடியாக 32 (22) ரன்கள் குவித்ததால் வெஸ்ட் இண்டீஸ் தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் குவித்து மாஸ் கம்பேக் கொடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4, ஜோஸ் ஹேசல்வுட் 2, நாதன் லயன் 2 விக்கெட்களை எடுத்தனர்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஸ்மித் 6 ரன்களில் முதல் ஓவேரிலேயே கிமர் ரோச் வேகத்தில் அவுட்டாக்கினார். அப்போது வந்த லபுஸ்ஷேன் 3 ரன்களில் அல்சாரி வேகத்தில் அவுட்டாக அடுத்ததாக வந்த கேமரா கிரீன் 8, டிராவிஸ் ஹெட் 0 ரன்களில் ரோச் வேகத்தில் வீழ்ந்தனர். அதனால் 24/4 என ஆஸ்திரேலியா அரிதாக ஆரம்பத்திலேயே தடுமாறிய நிலையில் ஒருபுறம் உஸ்மான் கவஜான் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் கை கொடுக்க முயற்சித்த மார்ஷ் 21 ரன்களில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த அலெக்ஸ் கேரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 (49) ரன்கள் விளாசி அவுட்டான நிலையில் நிதானமாக விளையாடிய உஸ்மான் கவாஜா 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனாலும் அடுத்ததாக வந்த கேப்டன் பட் கமின்ஸ் ஆஸ்திரேலியாவை சரிய விடாமல் முடிந்தளவுக்கு போராடி 64* ரன்கள் குவித்து 22 ரன்கள் முன்னதாக 289/9 ரன்களில் டிக்ளேர் செய்வதாக அறிவித்து டெஸ்ட் கொடுத்தார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிராக அருமையான சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பை தவறவிட்ட – தமிழகவீரர் அஷ்வின்

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக கிமர் ரோச் 3, அல்சாரி ஜோசப் 4 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்யும் வெஸ்ட் இண்டீஸ் 2வது நாள் முடிவில் 13/1 ரன்கள் எடுத்து மொத்தம் 35 ரன்கள் முன்னிலையில் உள்ளது. களத்தில் கேப்டன் ப்ரத்வெய்ட் 3* ரன்களுடன் உள்ளார். தற்போதைய நிலைமையில் போராடி முன்னலையில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் 300 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் பட்சத்தில் ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் 35 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைக்க பிரகாச வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement