இங்கிலாந்து அணிக்கெதிராக அருமையான சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பை தவறவிட்ட – தமிழகவீரர் அஷ்வின்

Ashwin
- Advertisement -

தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 95 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளார். அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்று விளையாடி வருகிறார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்த அஸ்வின் ஒவ்வொரு தொடரின் போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில முக்கிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தினார்.

- Advertisement -

அந்தவகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 21 ஓவர்கள் பந்துவீசிய அஷ்வின் 68 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இப்படி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அஸ்வின் பேட்டிங்கின் போது 11 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் மூலம் வெளியேறினார்.

இந்த போட்டியில் மட்டும் அவர் பேட்டிங்கில் 30 ரன்கள் அடித்திருந்தால் இங்கிலாந்து அணிக்கு எதிராக அற்புதமான சாதனையை நிகழ்த்தி இருப்பார். ஆனால் தற்போது அந்த சாதனையை அவர் தவற விட்டுள்ளார்.

- Advertisement -

இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக 32 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ள அஸ்வின் 6 அரைசதம் மற்றும் 1 சதம் என 970 ரன்கள் குவித்துள்ளார். எனவே இன்றைய போட்டியில் அவர் 30 ரன்கள் அடித்திருந்தால் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை கடந்து சாதனை நிறைந்திருப்பார்.

இதையும் படிங்க : 150 தாண்டிய லீட்.. சதத்தை பற்றிய கவலையின்றி.. நாள் முழுவதும் இங்கிலாந்து பவுலர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்

ஆனால் இப்படி 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்ததால் அவர் இந்த சாதனையை இந்த போட்டியில் தவற விட்டுள்ளார். நிச்சயம் எதிர்வரும் போட்டிகளில் அவர் அந்த சாதனையை எட்டி விடுவார் என்று உறுதியாக நம்பலாம். அதேவேளையில் அவரது பார்ட்னராக பார்க்கப்படும் ரவீந்திர ஜடேஜா இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 81 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement