150 தாண்டிய லீட்.. சதத்தை பற்றிய கவலையின்றி.. நாள் முழுவதும் இங்கிலாந்து பவுலர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீட்டில் தடுமாற்றமாக விளையாடி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் முதல் நாளிலேயே அதிரடியான அரை சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

முன்னிலையில் இந்தியா:
அதனால் 119/1 இன்றைய வலுவான துவக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு இன்று துவங்கிய இரண்டாவது நாளில் தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் சதத்தை நழுவ விட்டு 10 பவுண்டரி 3 சிக்ஸருடன் 80 (74) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்த சிலபவர்களில் அவருடன் தடுமாற்றமாக விளையாடிய கில் 23 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த கே.எல் ராகுல் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஆனாலும் அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களில் நடையை கட்டினார். இருப்பினும் எதிர்ப்புறம் தொடர்ந்து அசத்திய கேஎல் ராகுல் அரை சதம் கடந்து 8 பவுண்டரி 2 சித்தருடன் 86 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தார். அடுத்ததாக ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் 41 ரன்களில் ஜோ ரூட் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அப்போது வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன்னில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா அரை சதம் விளாசி இங்கிலாந்தை சவாலை கொடுத்து வருகிறார். அவருடன் சேர்ந்து விளையாடும் அக்சர் படேல் 4, 6, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளுடன் 2வது நாளை முடித்தார்.

இதையும் படிங்க: கைக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை இப்படி வீணடிச்சிட்டீங்களே.. கே.எல் ராகுல் செய்த தவறு – விவரம் இதோ

அந்த வகையில் 2வது முழுவதும் இங்கிலாந்து அடித்த இந்தியா ஆட்டநேர முடிவில் 421/7 ரன்கள் எடுத்து 175 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையை எட்டியுள்ளது. குறிப்பாக ஜெய்ஸ்வால், ராகுல் போன்ற பேட்ஸ்மேன்கள் சதத்தைப் பற்றி கவலைப்படாமல் அணியை முன்னிலைப்படுத்த பவுண்டரி அடிக்க போய் அவுட்டானார்கள். மறுபுறம் ஜோ ரூட் 2, டாம் ஹார்ட்லி 2 விக்கெட்களை எடுத்தும் இந்தியாவை ஆல் அவுட் செய்ய முடியாமல் இங்கிலாந்து தடுமாறி வருகிறது.

Advertisement