கைக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை இப்படி வீணடிச்சிட்டீங்களே.. கே.எல் ராகுல் செய்த தவறு – விவரம் இதோ

KL-Rahul
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் துவங்கியது.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தங்களது முதல் இன்னிங்ஸில் 246 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களையும், பேர்ஸ்டோ 37 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாளான இன்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக இரண்டாம் நாளின் மூன்றாவது செஷன் வரை இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை விட 121 ரன்கள் முன்னிலை பெற்று இன்னும் தொடர்ந்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் 123 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 86 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். சமீப காலமாகவே தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அற்புதமான வீரராக திகழ்ந்து வரும் கே.எல் ராகுல் இந்த போட்டியில் சதம் அடிக்க கைக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை தவற விட்டுவிட்டார் என்றே கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் மிக விரைவாகவே 86 ரன்கள் வரை சென்ற கே.எல் ராகுல் இன்னும் சற்று நேரம் நிதானித்து விளையாடி சிங்கிள், சிங்கிளாக விளையாடி இருந்தால் நிச்சயம் சதத்தை பூர்த்தி செய்திருக்க முடியும். ஆனால் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹார்ட்லி வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்க ஆசைப்பட்டு தூக்கி அடித்து ஆட்டம் இழந்தார்.

இதையும் படிங்க : இப்படியே ஆடுனா டெஸ்ட் அணியிலிருந்து காணாம போய்டுவாங்க.. இளம்வீரருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அடுத்து அனுபவ வீரராக பார்க்கப்படும் கே.எல் ராகுல் இப்படி இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடிக்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டது ஏமாற்றத்தை அளித்தாலும் நிச்சயம் அடுத்து வரும் போட்டிகளில் அவர் அதை திருத்தி சதம் அடிப்பார் என்று நம்பலாம்.

Advertisement