இப்படியே ஆடுனா டெஸ்ட் அணியிலிருந்து காணாம போய்டுவாங்க.. இளம்வீரருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் போட்டியின் முதல் நாள் அன்றே 246 ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் தேநீர் இடைவேளை வரை ஐந்து விக்கெட்டுகளை இழந்து 309 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி தற்போதைய நிலையில் 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணிக்காக மூன்றாம் இடத்தில் களமிறங்கி விளையாடிய சுப்மன் கில் 66 பந்துகளை சந்தித்து 23 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்துள்ளதால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஏனெனில் சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை அவர் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

குறிப்பாக துவக்க வீரராக ஆரம்பத்தில் களமிறங்கி விளையாடிவந்த அவர் ஜெய்ஸ்வாலின் வருகை காரணமாகவும், புஜாராவின் நீக்கம் காரணமாகவும் இருந்து மூன்றாவது இடத்திற்கு நகர்ந்தார். அப்படி தானாக முன் சென்று அந்த இடத்தினை அவர் விரும்பி பெற்றதால் கச்சிதமாக அந்த இடத்தை பிடித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : தேசிய கீதத்தின் போது தள்ளி நின்ற வீரர்கள்.. விக்கெட் கொண்டாடத்திலும் புறக்கணிப்பு – கேமரூன் கிரீனுக்கு ஏன் இந்த நிலை தெரியுமா?

ஆனால் இவ்வேளையில் கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஏற்கனவே வாய்ப்புக்காக பல்வேறு வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் சதத்திற்கு மேல் சதம் அடித்து காத்திருக்கும் வேளையில் இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சுப்மன் கில் வீணடித்து வருவது அவரது டெஸ்ட் இடத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றே தோன்றுகிறது.

Advertisement