மாயாஜால சுழலால் தெ.ஆ அணியை ஊதி தள்ளிய ஜடேஜா.. யுவராஜ் சிங், கபில் தேவின் தனித்துவமான சாதனை சமன்

Ravindra Jadeja 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை அசால்டாக 234 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 101*, ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் எடுத்த உதவியுடன் 327 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை தென்னாப்பிரிக்கா சேசிங் செய்ய முடியாத அளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா 27.3 ஓவரில் 83 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து அபார வெற்றி பெற்றது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அட்டகாசம் செய்த இந்திய சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5, ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 14 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஜடேஜாவின் சாதனை:
அதனால் தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் தொடர்ந்து 8வது வெற்றியை பதிவு செய்த இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்தை தனதாக்கி தங்களை சொந்த மண்ணில் கில்லி என்பதை காண்பித்துள்ளது. இந்த வெற்றிக்கு பிறந்தநாளில் சதமடித்த முதல் இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ஆனாலும் சுழலுக்கு சாதகமான மைதானத்தை பயன்படுத்தி கேப்டன் பவுமா, க்ளாஸென், டேவிட் மில்லர் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா மொத்தம் 9 ஓவரில் 1 மெய்டன் உட்பட 33 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக அசத்தினார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் 5 விக்கெட்களை எடுத்த இந்திய சுழல் பந்து வீச்சாளர் என்ற யுவராஜ் சிங் சாதனையையும் ஜடேஜா சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2011 உலகக் கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்ததை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இது போக இப்போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி 3 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட அவர் 29* (15) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். இதன் வாயிலாக உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் 25+ ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் கபில் தேவ், யுவராஜ் சிங் ஆகியோரின் தனித்துவமான சாதனையும் அவர் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: உண்மையாவே இது 326 ரன்ஸ் பிட்ச்சே கிடையாது.. எல்லா பாராட்டையும் அவங்களுக்கு கொடுங்க.. ஜடேஜா ஓப்பன்டாக்

இதற்கு முன் கடந்த 1983 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கபில் தேவ் மற்றும் 2011 உலக கோப்பையில் அயர்லாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் ஆகியோர் இதே போல 25க்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். ஆச்சரியப்படும் வகையில் 1983, 2011 வருடங்களில் இந்தியா கோப்பையை வென்றதைப் போல் இம்முறையும் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Advertisement