உண்மையாவே இது 326 ரன்ஸ் பிட்ச்சே கிடையாது.. எல்லா பாராட்டையும் அவங்களுக்கு கொடுங்க.. ஜடேஜா ஓப்பன்டாக்

Ravindra jadeja
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை 234 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மிரட்டியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 101*, ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்கள் எடுத்த உதவியுடன் 357 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதைத் துரத்திய தென்னாப்பிரிக்கா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 83 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்க்கோ யான்சன் 14 ரன்கள் எடுத்த நிலையில் பந்து வீச்சில் தெறிக்க விட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த வெற்றிக்கு பிறந்தநாளில் சதமடித்த முதல் இந்திய வீரராகவும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரராக சச்சின் டெண்டுல்கரின் சாதனையும் சமன் செய்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

ஜடேஜா பாராட்டு:
இந்நிலையில் கொல்கத்தா பிட்ச் 250 – 260 ரன்கள் அடிக்கும் அளவுக்கு மட்டுமே இப்போட்டியில் இருந்ததாக கூறும் ரவீந்திர ஜடேஜா அதையும் தாண்டி இந்தியா 327 ரன்கள் குவித்து வென்றதற்கான பாராட்டுக்கள் விராட் கோலியை சேரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு நாளும் தங்களுடைய பிறந்தநாளே என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“இந்த சதம் விராட் கோலிக்கு ஸ்பெஷலாக இருக்கும். ஏனெனில் இது மிகவும் கடினமானது. இந்த பிட்ச்சில் ஒரு கட்டத்தில் 250 – 260 ரன்கள் அடித்தாலே போதும் என்று நாங்கள் நினைத்தோம். குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்ட்ரைக்கை மாற்றி பவுண்டர்கள் அடிப்பது சவாலாக இருந்தது. அதிலும் ஸ்பின்னர்கள் எளிதாக ரன்கள் எடுத்த விடாமல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்”

- Advertisement -

“ஆனால் அங்கிருந்து கடைசி வரை அவுட்டாகாமல் அணியை 300 ரன்கள் அடிக்க வைத்தது விராட் கோலியை பொறுத்த வரை மிகப் பெரிய சாதனையாகும். மேலும் பிறந்தநாள் மற்றும் இந்தியாவுக்காக விளையாடுவதில் எவ்விதமான வித்தியாசமும் இல்லை. இந்தியாவின் உடையை நாங்கள் அணியும் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு பிறந்த நாளாகும். ஏனெனில் அந்த உடையை அடைவதற்கு அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை”

இதையும் படிங்க: ஒய்ட் பால் கிரிக்கெட்டின் கில்லியாக.. சச்சின் உட்பட உலகில் வேறு யாருமே செய்யாத சாதனை படைத்த கிங் கோலி

“எனவே ஒருவருடைய பிறந்தநாளில் இந்தியா வெல்வதை பார்ப்பது இரு மடங்கு சந்தோசமாகும். மேலும் 49 – 50 என விராட் கோலியின் சதம் எதுவாக இருந்தாலும் அது இந்தியாவுக்கு பயனை ஏற்படுத்தும் என்பதால் அது தொடர வேண்டும். இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் யார் ரன்கள் அடித்தாலும் விக்கெட்டுகள் எடுத்தாலும் அது நல்லது. இது தொடர வேண்டும்” என்று கூறினார்.

Advertisement