தல தோனியின் வாழ்நாள் சாதனையை சமன் செய்த ஜடேஜா.. ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக தனித்துவ சாதனை

Jadeja and MS Dhoni
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய 5வது போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்தது. ஏப்ரல் 8ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா சுமாராக விளையாடிய 20 ஓவரில் 137/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34, சுனில் நரேன் 27 ரன்கள் எடுத்தார்கள்.

சென்னைக்கு சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, துஷார் தேஷ்பாண்டே 3, முஸ்தஃபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 138 ரன்களை துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா 15, டேரில் மிட்சேல் 25, சிவம் துபே ரன்களில் அவுட்டானாலும் கேப்டன் ருதுராஜ் கைக்வாட் நங்கூரமாக விளையாடி 67* (58) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

சிஎஸ்கே நாயகன்:
அதனால் 17.4 ஓவரிலேயே இலக்கை எட்டிய சென்னை 2 தொடர் தோல்விகளை நிறுத்தி தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றது. அதன் காரணமாக வைபவ் அரோரா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் கொல்கத்தா முதல் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 4 ஓவரில் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சென்னை அணியில் விளையாடி வரும் அவர் 2018, 2021, 2023 ஆகிய வருடங்களில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார். மேலும் இந்த விருதையும் சேர்த்து சென்னை அணிக்காக ரவீந்திர ஜடேஜா இதுவரை 15 ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரர் என்ற எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையை ஜடேஜா சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் எம்.எஸ். தோனியும் சிஎஸ்கே அணிக்காக 15 ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். தற்போது தோனிக்கு நிகராக ஜடேஜா முதலிடம் பிடித்துள்ள அந்த பட்டியலில் 2வது இடத்தில் சுரேஷ் ரெய்னா (12), 3வது இடத்தில் ருதுராஜ் கைக்வாட் மற்றும் மைக் ஹசி (தலா 10) உள்ளார்கள். 4வது இடத்தில் ஷேன் வாட்சன் மற்றும் டு பிளேஸி (தலா 6) உள்ளனர்.

இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் எதிரணிகள் தடுமாற காரணம் இது தான்.. சிஎஸ்கே ரசிகர்கள் பெயர் வைக்கல.. ஜடேஜா பேட்டி

இது போக 230 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா 2776* ரன்கள், 153* விக்கெட்டுகளை எடுத்து 100* கேட்சுகளையும் பிடித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 1000 ரன்கள், 100 விக்கெட்டுகள், 100 கேட்ச்கள் எடுத்த முதல் வீரர் என்ற மாபெரும் தனித்துவமான சாதனையையும் ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். அந்த வகையில் சிஎஸ்கே நாயகனாக ஜடேஜா செயல்பட்டு வருவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement