சேப்பாக்கத்தில் எதிரணிகள் தடுமாற காரணம் இது தான்.. சிஎஸ்கே ரசிகர்கள் பெயர் வைக்கல.. ஜடேஜா பேட்டி

Ravindra Jadeja
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்ற 22வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 137/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 34, சுனில் நரேன் 27 ரன்கள் எடுத்தனர்.

சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 138 ரன்களை துரத்திய சென்னைக்கு ரன்கள் கேப்டன் ருதுராஜ் கைக்வாட் 67* (58), சிவம் துபே 28 (18), டேரில் மிட்சேல் 25 (19) அடித்து 17.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 2 தொடர் தோல்விகளை நிறுத்திய சென்னை 5 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

பெயர் வைக்கல:
மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்க தவறிய கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக வைபவ் அரோரா 2 விக்கெட்டுகள் எடுத்தும் முதல் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி 4 ஓவரில் வெறும் 18 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தோனிக்கு தல, சுரேஷ் ரெய்னாவுக்கு சின்ன தல பெயர் வைத்து கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள் உங்களை என்ன சொல்லி கொண்டாடுகிறார்கள் என ரவீந்திர ஜடேஜாவிடம் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு இன்னும் சிஎஸ்கே ரசிகர்கள் தமக்கு அப்படி ஒரு பெயர் வைக்கவில்லை என்று ஜடேஜா கலகலப்பாக தெரிவித்தார். மேலும் சேப்பாக்கத்தில் எதிரணிகள் தடுமாறுவதற்கான காரணத்தை பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“என்னுடைய பெயர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனக்கும் ஒரு பெயரை அவர்கள் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த பிட்ச்சில் நான் எப்போதும் என்னுடைய பவுலிங்கை மகிழ்ச்சியாக செய்கிறேன். குறிப்பாக சரியான இடத்தில் வீசினால் பந்து கொஞ்சம் பிடித்து வந்து செய்யும் என்று நம்பினேன். இது போன்ற ஆடுகளத்தில் எதிரணிகள் செட்டிலாகி திட்டமிடுவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும்”

இதையும் படிங்க: 67 ரன்ஸ்.. கோட்டையில் கொல்கத்தாவை சாய்த்த சிஎஸ்கே.. 5 வருடம் கழித்து தோனியின் சாதனையை சமன் செய்த ருதுராஜ்

“ஏனெனில் பொதுவாகவே அவர்கள் இங்கே 2 – 3 நாட்கள் மட்டுமே தயாராவதற்கான நேரத்தை பெறுவார்கள். எனவே எதிரணிகள் இங்கே வந்து பிட்ச் எப்படி இருக்கும் என்பதை கண்டறிந்து அதற்கு தகுந்தார் போல் விளையாடுவது கொஞ்சம் கடினமாகும். ஆனால் எங்களுக்கு இங்குள்ள சூழ்நிலைகள் நன்றாக தெரியும்” என்று கூறினார். அந்த வகையில் வலுவான கொல்கத்தாவையே தோற்கடித்த சென்னை சேப்பாக்கத்தை தங்களுடைய கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

Advertisement