67 ரன்ஸ்.. கோட்டையில் கொல்கத்தாவை சாய்த்த சிஎஸ்கே.. 5 வருடம் கழித்து தோனியின் சாதனையை சமன் செய்த ருதுராஜ்

CSk vs KKR 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் எட்டாம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 22வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு துசார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே பில் சால்ட் டக் அவுட்டானர்.

இருப்பினும் அடுத்து வந்த அங்ரிஸ் ரகுவன்ஷியுடன் சேர்ந்த சுனில் நரேன் 2வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் பவர் பிளே முடிந்ததும் முதல் பந்திலேயே ரகுவன்சியை 24 (18) ரன்களில் அவுட்டாக்கிய ஜடேஜா மறுபுறம் அதிரடி காட்டிய சுனில் நரேனையும் 27 (20) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

சென்னை வெற்றி:
அத்துடன் நிற்காத அவர் அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயரையும் 3 (8) ரன்களில் செவிலியன் அனுப்பி வைத்தார். அப்போது வந்த ரமந்திப் சிங் 13 ரன்களில் தீக்சனா சுழலில் சிக்கினார். அதனால் 85/5 என தடுமாறிய கொல்கத்தாவை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் வந்த ரிங்கு சிங் 9 (14), ஆண்ட்ரே ரசல் 10 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.

இறுதியில் ஸ்ரேயாஸ் ஐயரும் 34 (32) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 20 ஓவரில் கொல்கத்தா 137/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. பந்து வீச்சில் அசத்திய சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, துஷார் தேஷ்பாண்டே 3, முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 138 என்ற சுலபமான இலக்கை துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாட முயற்சித்து 15 (8) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் கேப்டன் ருதுராஜ் நிதானமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் எதிர்புறம் வந்த டேரில் மிட்சேல் இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 25 (19) ரன்களில் சுனில் நரேன் சுழலில் போல்ட்டானார். அப்போது வந்த சிவம் துபே தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக 1 பவுண்டரி 3 சிக்சருடன் 28 (18) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து நிதானமாக விளையாடிய கேப்டன் ருதுராஜ் ஒன்பது பவுண்டரியுடன் அரை சதமடித்து 67* (58) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.

அதனால் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சதமடித்த கேப்டன் என்ற தோனியின் சாதனையையும் ருதுராஜ் சமன் செய்தார். இதற்கு முன் 21 அரை சதங்கள் அடித்த தோனி கடைசியாக 2019இல் அரை சதமடித்திருந்தார். அவருக்குப் பின் தற்போது ருதுராஜ் தான் சிஎஸ்கே அணிக்காக கேப்டனாக அரை சதமடித்துள்ளார்.

இதையும் படிங்க: கோலி, ரெய்னா, பொல்லார்டு, ரோஹித் ஆகியோருக்கு அடுத்து 5 ஆவது வீரராக ஐ.பி.எல் தொடரில் – ஜடேஜா நிகழ்த்திய சாதனை

அதன் காரணமாக 17.4 ஓவரிலேயே 141/3 ரன்கள் எடுத்த சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அதனால் காரணமாக 2 தொடர் தோல்விகளை தங்களுடைய கோட்டையான சேப்பாக்கத்தில் நிறுத்திய சென்னை 5 போட்டிகளில் 3வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா 2 விக்கெட்டுகள் எடுத்தும் முதல் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement