கோலி, ரெய்னா, பொல்லார்டு, ரோஹித் ஆகியோருக்கு அடுத்து 5 ஆவது வீரராக ஐ.பி.எல் தொடரில் – ஜடேஜா நிகழ்த்திய சாதனை

Jadeja
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22-ஆவது லீக் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி ஏப்ரல் 8-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணியானது இந்த போட்டியில் வெற்றியுடன் கம்பேக் கொடுக்கும் வகையில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று துவங்கிய இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடி கொல்கத்தா அணி சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே குவித்தது. கொல்கத்தா அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களை குவித்தார்.

சென்னை சார்பாக துஷார் தேஷ்பாண்டே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து தற்போது 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் ஆடிய சென்னை அணியின் வீரர் ரவீந்திர ஜடேஜா பிடித்த 2 கேட்ச்கள் மூலம் ஐ.பி.எல் தொடரில் ஒரு தனிப்பட்ட சாதனை மைல்களை தொட்டு அசத்தியுள்ளார். அந்த வகையில் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக கேட்ச்களை பிடித்த வீரராக விராட் கோலி 110 கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : 50/1 டூ 87/8.. 8 பந்தில் 3 விக்கெட்.. மிரட்டிய ஜடேஜா, தேஷ்பாண்டே.. காட்டடி கொல்கத்தாவை அடக்கிய சிஎஸ்கே

அவருக்கு அடுத்து சுரேஷ் ரெய்னா 108 கேட்ச்களுடன் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் கைரன் பொல்லார்டு 103 கேட்ச்களுடனும், நான்காவது இடத்தில் ரோகித் சர்மா 100 கேட்ச்களுடனும் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது கொல்கத்தா அணியின் வீரர்களான சால்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியவர்களின் கேட்சை பிடித்த ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் 100 கேட்ச்களை பூர்த்தி செய்த ஐந்தாவது வீரராக சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement