50/1 டூ 87/8.. 8 பந்தில் 3 விக்கெட்.. மிரட்டிய ஜடேஜா, தேஷ்பாண்டே.. காட்டடி கொல்கத்தாவை அடக்கிய சிஎஸ்கே

CSK vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் எட்டாம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 22வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கொல்கத்தாவுக்கு எதிராக டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு துஷார் தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே பில் சால்ட் கோல்டன் டக் அவுட்டானார்.

இருப்பினும் அடுத்ததாக வந்த அங்குரிஸ் ரகுவன்சியுடன் சேர்ந்த சுனில் நரேன் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் சவாலை கொடுத்த இந்த ஜோடியில் பவர் பிளே முடிந்த முதல் பந்திலேயே ரகுவன்சியை 28 (18) ரன்களில் காலி செய்த ஜடேஜா 5வது பந்தில் சுனில் நரேனையும் 27 (20) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அடக்கிய சிஎஸ்கே:
அதோடு நிற்காத ஜடேஜா அடுத்த சில ஓவரில் அடுத்ததாக வந்த வெங்கடேஷ் ஐயரையும் 3 (8) ரன்களில் அவுட்டாக்கி 8 பந்துகளில் 3 விக்கெட்டுகளை எடுத்து போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார். அடுத்த சில ஓவர்களில் ரமந்தீப் சிங் 13 (12) ரன்களில் தீக்சனா சுழலில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 85/5 என தடுமாறிய கொல்கத்தாவை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் ஜோடி சேர்ந்து சரிவை சரி செய்ய போராடினர்.

இருப்பினும் இந்த ஜோடி சென்னை பவுலர்களின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் திணறலாக பேட்டிங் செய்தது. அதில் அதிரடியாக விளையாடக் கூடிய ரிங்கு சிங் தடுமாற்றமாக செயல்பட்டு 9 (14) ரன்களில் துஷார் தேஷ்பாண்டே வேகத்தில் போல்டானார். இப்போது வந்து அதிரடியாக விளையாட முயற்சித்த ஆண்ட்ரே ரசல் 10 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தார்.

- Advertisement -

இறுதியில் ஸ்ரேயாஸ் ஐயரும் 34 (32) ரன்களில் போராடி அவுட்டானார். அடுத்து வந்த வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவரில் கொல்கத்தா 137/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக முதல் 5 ஓவரில் 50/1 ரன்கள் எடுத்த அந்த அணி ரசல், ரிங்கு சிங் போன்ற காட்டடி பேட்ஸ்மேன்களை கொண்டிருப்பதால் கண்டிப்பாக 150 – 180 ரன்கள் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: அந்த 2 பேர் கூட நான் ஹோட்டல் ரூம் ஷேர் பண்ணமாட்டேன்.. எனக்கு செட் ஆகாது – ரோஹித் சர்மா ஓபன்டாக்

ஆனால் அப்போது அபாரமாக பந்து வீசிய சென்னை அடுத்த 15 ஓவரில் 87 ரன்கள் மட்டும் கொடுத்து 8 விக்கெட்டுகள் எடுத்து கொல்கத்தாவை அடக்கியது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய சென்னை சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3, தூஷார் தேஷ்பாண்டே 3 முஸ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். மேலும் இப்போட்டியில் 3 கேட்ச்கள் பிடித்த ஜடேஜா ஐபிஎல் தொடரில் 100* கேட்ச்கள் பிடித்த 5வது வீரர் என்ற சாதனையும் படைத்தார்.

Advertisement