லெஜெண்ட் கபில் தேவின் மகத்தான சாதனை சமன் செய்த்து – இர்பான் பதான் ஆல் டைம் சாதனையை தகர்த்த ஜடேஜா

Ravindra Jadeja
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற கடைசி சூப்பர் 4 போட்டியில் ஏற்கனவே தொடரிலிருந்து வெளியேறிய வங்கதேசத்தை அடுத்தடுத்த வெற்றிகளால் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்ற இந்தியா எதிர்கொண்டது. கொழும்புவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசத்திற்கு ஹசன் 13, லிட்டன் தாஸ் 0, அனமல் ஹைக் 4, மெஹதி ஹசன் 13 என டாப் 4 பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 59/4 என ஆரம்பத்தில் தடுமாறிய வங்கதேசத்திற்கு மிடில் ஆர்டரில் கேப்டன் சாகிப் அல் ஹசன் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பவுலர்களுக்கு சவாலை கொடுத்து 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தவ்ஹீத் ஹ்ரிடாய் 54 ரன்கள் எடுக்க கடைசியில் நசும் அஹ்மத் 44, மெகிதி ஹசன் 29* ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவர்களில் வங்கதேசம் 265/8 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

ஜடேஜாவின் சாதனை:
இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துள் தாக்கூர் 3 விக்கெட்டுகளும் முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதே போல நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தம்முடைய 10 ஓவர்களில் 1 மெய்டன் உட்பட 53 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இந்த ஒரு விக்கெட்களையும் சேர்த்து இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 182 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

அத்துடன் பேட்ஸ்மேனாகவும் இதுவரை 182 போட்டிகளில் 123 இன்னிங்ஸில் 2578 ரன்களை 32.23 என்ற சராசரியில் எடுத்துள்ள அவர் இதன் வாயிலாக ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்களையும் 200 விக்கெட்டுகளையும் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எடுத்த 7வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் அனில் கும்ப்ளே (337), ஜவகல் ஸ்ரீநாத் (315), அஜித் அகர்கர் (228), ஹர்பஜன் சிங் (282), ஜாகிர் கான் (269), கபில் தேவ் (251) ஆகியோர் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளனர். இது போக கடந்த 2010 முதல் ஆசிய கோப்பை தொடர்களில் விளையாடி வரும் அவர் இதுவரை மொத்தம் 25 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs BAN : எப்போ தான் முன்னேறுவாங்களோ தெரில.. திருப்பி அடித்த வங்கதேசம்.. பும்ரா இல்லாமல் அந்த விஷயத்தில் தடுமாறும் இந்தியா

இதன் வாயிலாக ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற இர்பான் பதான் ஆல் டைம் சாதனையை கடந்த போட்டியிலேயே சத்தமின்றி உடைத்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவீந்திர ஜடேஜா : 25* (18 இன்னிங்ஸ்)
2. இர்ஃபான் பதான் : 22 (12 இன்னிங்ஸ்)
3. குல்தீப் யாதவ் : 19* (9 இன்னிங்ஸ்)
4. சச்சின் டெண்டுல்கர் : 17 (15 இன்னிங்ஸ்)
5. கபில் தேவ் : 15 (7 இன்னிங்ஸ்)

Advertisement