IND vs BAN : எப்போ தான் முன்னேறுவாங்களோ தெரில.. திருப்பி அடித்த வங்கதேசம்.. பும்ரா இல்லாமல் அந்த விஷயத்தில் தடுமாறும் இந்தியா

IND vs BAN
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் 8வது கோப்பையை வென்று சரித்திரம் படைக்கும் முனைப்புடன் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை போன்ற சவாலான அணிகளை தோற்கடித்து அடுத்தடுத்த வெற்றிகளுடன் ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது. அந்த நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்ற கடைசி சூப்பர் 4 போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட இந்தியா முதலில் டாஸ் வென்று பந்து வீசுவதாக அறிவித்தது.

அதில் ஏற்கனவே வங்கதேசம் வெளியேறிவிட்டதால் விராட் கோலி, பும்ரா போன்ற வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு திலக் வர்மா அறிமுகமானார். அதை தொடர்ந்து பேட்டிங்கை துவக்கிய வங்கதேசத்திற்கு ஹசன் 13, லிட்டன் டாஸ் 0, அனமல் ஹைக் 4, மெஹதி ஹசன் 13 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 59/4 என சரிவை சந்தித்த வங்கதேசம் 150 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

பும்ரா இல்லாமல் தடுமாற்றம்:
அப்போது கேப்டன் சாகிப் அல் ஹசன் நங்கூரமாக நின்று இந்திய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். குறிப்பாக 14வது ஓவரில் தவ்ஹீத் ஹ்ரீடாயுடன் சேர்ந்த அவர் 34 ஓவர்கள் வரை பெரிய சவாலை கொடுத்து திருப்பி அடிக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தி 6 பவுண்டரி 4 சிக்சருடன் 80 (85) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் மறுபுறம் 5வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு தாக்குப் பிடித்த தவ்ஹீத் ஹ்ரிடாய் 54 ரன்களில் அவுட்டாகி சென்றார்.

அப்போது கூட 161/6 என தடுமாறிய வங்கதேசத்தை 200 ரன்கள் தாண்ட விடாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு எதிராக மீண்டும் 8வது இடத்தில் களமிறங்கிய நசும் அகமது சற்று அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 1 சிக்சருடன் 44 (45) ரன்கள் குவித்து பெரிய சவாலை கொடுத்தார். அவரை விட கடைசி நேரத்தில் மெகிதி ஹசன் அதிரடியாக 29* (23) ரன்களும் டன்சிம் சாகிப் 14* (8) ரன்களும் எடுத்து வங்கதேசம் ஆல் அவுட்டாவதை தடுத்து நிறுத்தினார்கள்.

- Advertisement -

அதனால் 50 ஓவர்களில் வங்கதேசம் 265/8 என்ற நல்ல ஸ்கோர் குவித்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக சர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளும் முகமது ஷமி 2 விக்கெட்களும் எடுத்தனர். முன்னதாக சமீப காலங்களாகவே ஆரம்பத்தில் விக்கெட்டுகளை எடுத்த பின் எதிரணியை சுருட்டுவதில் இந்தியா தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக எதிரணியின் லோயர் ஆர்டர் அல்லது டெய்லர் பேட்ஸ்மேன்கள் சவாலை கொடுக்கும் அளவுக்கு இந்தியாவின் பவுலிங் பும்ரா இல்லையென்றால் தடுமாறுகிறது.

இதையும் படிங்க: ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆவது இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா – அஷ்வின் கூட இதை பண்ணல

எடுத்துக்காட்டாக பும்ரா இல்லாம இதே தொடரில் நேபாளுக்கு எதிராக 230 ரன்களை வழங்கிய இந்திய பவுலர்கள் இந்த போட்டியில் 59/4 என தவித்த வங்கதேசத்தை சுருட்ட முடியாத அளவுக்கு சுமாராகவே செயல்பட்டனர். அதனால் உலக கோப்பைக்கு முன்பாக இந்த விஷயம் எப்போது மாறப்போகிறது என்று ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement