ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆவது இந்திய வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா – அஷ்வின் கூட இதை பண்ணல

Jadeja
- Advertisement -

இலங்கையில் நடைபெற்று வரும் நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் போர் சுற்றின் ஆறாவது போட்டியானது இன்று செப்டம்பர் 15-ஆம் தேதி கொழும்பு நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது வங்கதேச அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய போட்டியில் பத்து ஓவர்கள் வீசிய ரவீந்திர ஜடேஜா 1 மெய்டன் உட்பட 53 ரன்களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் வங்கதேச வீரரான ஷமீம் ஹுசேன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதன்படி ஷமீம் ஹுசேன் விக்கெட்டை அவர் வீழ்த்திய போது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார். இப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த இந்திய வீரராக ஏழாம் இடத்தினையும் அவர் பிடித்துள்ளார்.

- Advertisement -

நட்சத்திர தமிழக சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் கூட நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தி ஜடேஜா அசத்தியுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணி சார்பாக அணில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், அஜித் அகார்கர், ஜாஹீர் ஜான், ஹர்பஜன் சிங், கபில்தேவ் போன்ற வீரர்கள் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.

இதையும் படிங்க : IND vs BAN : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் வாய்ப்பு மறுப்பு. நம்பர் 4 வீரருக்கு கட்டம் கட்டிய – ரோஹித் சர்மா

இந்நிலையில் அவர்களை தொடர்ந்து இன்றைய போட்டியில் ஜடேஜா எடுத்த ஒரு விக்கெட்டின் மூலம் 7-ஆவது இந்திய வீரராக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ரவீந்திர ஜடேஜா இதுவரை 182 போட்டிகளில் பங்கேற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement