IND vs BAN : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிலும் வாய்ப்பு மறுப்பு. நம்பர் 4 வீரருக்கு கட்டம் கட்டிய – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

இலங்கை நாட்டில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதோடு எதிர்வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி கொழும்பு நகரில் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் இந்திய அணி பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக சூப்பர் போர் சுற்றின் கடைசி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இன்று இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

இந்த கடைசி போட்டிக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மிடில் ஆர்டரில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹார்டிக் பாண்டியா என முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியிலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது அவரது இடத்திற்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதோ என்று என்ன தோன்றுகிறது. ஏனெனில் நான்காம் இடத்தில் களமிறங்கி கடந்த சில ஆண்டுகளாகவே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் காயத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னரே ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைத்தது.

- Advertisement -

இவ்வேளையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மட்டுமே விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் அதன் பிறகு அணியில் இருந்து தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார். மேலும் கடந்த போட்டிக்கு முன்னதாகவே காயம் என்று கூறி ரோஹித் சர்மா அவரை வெளியேற்றினார்.

இதையும் படிங்க : இது டி20 இல்ல.. பாகிஸ்தான் ஈஸியா ஜெயிச்சுருக்கும்.. உங்களோட அந்த கேப்டன்ஷிப் தவறால் எல்லாம் போச்சு – பாபரை விமர்சித்த கம்பீர்

இந்நிலையில் வங்கதேச அணிக்கு அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு முன்னர் நேற்றைய வலைப்பயிற்சியில் அவர் பயிற்சி செய்தும் இன்றைய வங்கதேச போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இப்படி தொடர்ச்சியாக ரோகித் சர்மா ஷ்ரேயாஸ் ஐயரை ஒதுக்கி வருவதால் அவரது இடம் பறிபோக கூட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

Advertisement