இது டி20 இல்ல.. பாகிஸ்தான் ஈஸியா ஜெயிச்சுருக்கும்.. உங்களோட அந்த கேப்டன்ஷிப் தவறால் எல்லாம் போச்சு – பாபரை விமர்சித்த கம்பீர்

Gautam Gambhir
- Advertisement -

பரபரப்பான தருணங்களுடன் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை கொண்டிருந்ததால் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுடன் தோல்வியை சந்தித்து வெளியேறியுள்ளது. குறிப்பாக லீக் சுற்றில் நேபாளை எளிதாக தோற்கடித்த அந்த அணி இந்தியாவுக்கு 66/4 என பெரிய சவாலை கொடுத்தது. ஆனாலும் சூப்பர் 4 சுற்றில் பேட்டிங்கில் மிரட்டலாக செயல்பட்டு தெறிக்க விட்ட இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு வரலாறு காணாத தோல்வியை கொடுத்தது.

அதனால் மோசமான ரன்ரேட் பெற்ற பாகிஸ்தான் கடைசி போட்டியில் இலங்கையை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் களமிறங்கிய போதும் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. குறிப்பாக மழையால் 42 ஓவரில் பாகிஸ்தான் நிர்ணயித்த 252 ரன்களை துரத்திய இலங்கைக்கு குஷால் மெண்டிஸ் 91, சமரவிக்ரமா 48 ரன்களும் எடுக்க கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது அசலங்கா 4, 2 ரன்கள் அடித்து மொத்தம் 49* ரன்கள் குவித்து தன்னுடைய அணியை ஃபைனலுக்கு அழைத்து சென்றார்.

- Advertisement -

கம்பீர் விமர்சனம்:
இந்நிலையில் இந்த போட்டியில் கடைசிக்கட்ட பரபரப்பான தருணங்களில் பாபர் அசாம் சரியான இடத்தில் ஃபீல்டர்களை நிறுத்தாமல் சுமாரான கேப்டன்ஷிப் செய்ததே பாகிஸ்தான் வெற்றியை தாரை வார்த்ததாக கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு இந்த கேப்டன்ஷிப் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது”

“ஏனெனில் கடந்தவரில் ஜமான் கானுக்கு எதிராகவும் அதற்கு முன்பே ஓவரில் ஷாகின் அப்ரிடிக்கு எதிராகவும் மிட் ஆஃப் திசையில் இலங்கை வீரர்கள் தலா 1 பவுண்டரி அடித்தனர். அந்த 2 பந்துகளுமே மெதுவாக வீசப்பட்டதாகும். பொதுவாக நீங்கள் மெதுவான பந்தை வீசும் போது மிட் ஆஃப் ஃபீல்டரை லாங்க் ஆஃப் திசையில் நிறுத்தி விட்டு தேர்ட் மேனை உள்ளே கொண்டு வர வேண்டும். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் இலங்கையை நிறுத்துவது கடினமாகியிருக்கும்”

- Advertisement -

“அதனால் நீங்கள் வெற்றி கைமாறுவதற்கான அனுமதியை கொடுத்தீர்கள். குறிப்பாக நீங்கள் உங்களுடைய 6வது பவுலர் முழுமையான 10 ஓவர்கள் வீசுவதில் குறியாக இருந்தீர்கள். மேலும் சமரவிக்கிரமா மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைக்கும் போது நீங்கள் உங்களுடைய முதன்மை பவுலரை கொண்டு வந்து உடைக்க முயற்சித்திருக்க வேண்டும். அதை செய்து சில விக்கெட்டுகளை எடுத்திருந்தால் பாகிஸ்தான் மிகவும் எளிதாக வெற்றி பெற்றிருக்கும்”

இதையும் படிங்க: IND vs BAN : சம்பிரதாய போட்டியில் கோலிக்கு ஓய்வு, இளம் வீரர் அறிமுகம் – இந்திய அணியில் நிகழ்ந்த 5 மாற்றங்கள் இதோ

“அந்த வகையில் ஒருநாள் போட்டிகள் டி20 கிரிக்கெட்டை போல் கிடையாது என்பதை புரிந்து கொண்டு பாபர் அசாம் சற்று கேப்டன்ஷிப் செயல்பாடுகளில் முன்னேற வேண்டும்” என்று நான் கருதுகிறேன் என கூறினார். மேலும் இந்த தோல்வியால் ஐசிசி தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தையும் பாகிஸ்தான் இழந்து விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement