ஆசிய கோப்பை வரலாற்றில் இர்பான் பதானின் ஆல் டைம் சாதனையை சமன் செய்த ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ

- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் நேபாளுக்கு எதிரான 2வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற அசத்தியுள்ளது. இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற அப்போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த நேபாள் முடிந்தளவுக்கு போராடி 48.2 ஓவரில் 230 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆசிப் சேக் 58 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வேலை செய்தனர்.

அதைத்தொடர்ந்து 231 ரன்கள் துரத்திய இந்தியாவுக்கு குறுக்கே மழை வந்ததால் 23 ஓவரில் 145 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி 5 சிக்சருடன் 74* (59) ரன்கள் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 67* (62) ரன்களும் எடுத்தனர். அதனால் கடைசி வரை அவுட்டாகாமல் 20.1 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா மிகவும் எளிதான வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

ஜடேஜாவின் சாதனை:
இதைத்தொடர்ந்து வரும் செப்டம்பர் 10ஆம் தேதி மீண்டும் பரம எதிரி பாகிஸ்தானை சூப்பர் 4 சுற்றில் இந்தியா எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நேபாள் ஓப்பனிங் ஜோடியை 10வது ஓவரில் ஷார்துல் தாகூர் பிரித்ததும் பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா தன்னுடைய சிறப்பான சுழல் பந்து வீச்சால் பீம் சர்க்கி 7, கேப்டன் ரோஹித் பௌடேல் 5, கௌசல் மல்லா 2 என 3 முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அந்த வகையில் மொத்தம் 10 ஓவரில் 40 ரன்கள் மட்டும் கொடுத்த அவர் 3 விக்கெட்டுகளை எடுத்து மிகச்சிறப்பாக செயல்பட்டார். அதிலும் கடந்த 22 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்ததால் 2023 உலகக் கோப்பையில் மிகவும் முக்கிய ஆல் ரவுண்டரான அவருடைய பவுலிங் சுமாராக இருப்பதாக நினைத்து இத்தொடரின் துவக்கத்தில் நிறைய ரசிகர்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

ஆனால் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையிலை என்ற வகையில் சிறப்பாக பந்து வீசி தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்த அவர் இப்போட்டியில் எடுத்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து 50 ஓவர் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை சாய்த்த இந்திய பந்து வீச்சாளர் என்ற இர்ஃபான் பதான் ஆல் டைம் சாதனையை சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்கள் இல்லனா நீங்க இல்ல, தில்லாலங்கடி வேலையை நிறுத்துமாறு பிசிசிஐ – ஜெய் ஷா’வை தைரியமாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்

கடந்த 2010 ஆசிய கோப்பை தொடரிலிருந்து விளையாடி வரும் அவர் இதுவரை மொத்தம் 22 விக்கெட்டுகளை எடுத்து இந்த சாதனையை சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரவீந்திர ஜடேஜா : 22* விக்கெட்கள் (15 இன்னிங்ஸ், 24.5 சராசரி)
2. இர்பான் பதான் : 22 விக்கெட்கள் (12 இன்னிங்ஸ், 27.5 சராசரி)
3. சச்சின் டெண்டுல்கர் : 17 விக்கெட்கள் (15 இன்னிங்ஸ்)
4. கபில் தேவ் : 15 விக்கெட்கள் (7 இன்னிங்ஸ், 13 சராசரி)

Advertisement