தரமான ஜோ ரூட்டை அசால்ட்டாக.. அடக்குவதில் நேதன் லயனை முந்திய ஜடேஜா.. புதிய சாதனை

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஹைதராபாத் நகரில் துவங்கியுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 246 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி முதல் நாள் முடிவில் 119/1 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

அடக்கும் ஜடேஜா:
இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 24 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் ஆரம்பம் முதலே இங்கிலாந்து பவுலர்களை சொல்லி அடிக்கும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 76* (70) ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். அதனால் இங்கிலாந்தை விட இன்னும் 127 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ள இந்தியா 9 விக்கெட்டுகளை கைவசம் வைத்திருப்பதால் இப்போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது என்றே சொல்லலாம்.

முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்று தடுமாற்றமாக பேட்டிங் செய்த இங்கிலாந்துக்கு மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாட முயற்சித்த ஜோ ரூட் 29 ரன்கள் அடித்தார். அந்த 29 ரன்களையும் சேர்த்து இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (2535 ரன்கள்) வாழ்நாள் சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை (2536* ரன்கள்) படைத்தார்.

- Advertisement -

மேலும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்ற தரமான வீரர்களை விட அட்டகாசமாக செயல்பட்டு வரும் அவர் ஏற்கனவே 10000 ரன்கள் அடித்து நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் மகத்தானவராக செயல்பட்டு வருகிறார். ஆனால் அப்படிப்பட்ட தரமான ஜோ ரூட்டை இப்போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ரவீந்திர ஜடேஜா செட்டிலாகி அரை சதமடிக்க விடாமல் முக்கிய நேரத்தில் அவுட்டாக்கினார்.

இதையும் படிங்க: 9 ஃபோர்ஸ் 3 சிக்ஸ்.. 47 பந்தில் 50.. ரோஹித், சேவாக்கின் சாதனையை தூளாக்கிய ஜெய்ஸ்வால்.. தனித்துவ அதிரடி சாதனை

அதை விட இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டை 9வது முறையாக ரவீந்திர ஜடேஜா அவுட்டாக்கியுள்ளார். இதன் வாயிலாக ஜோ ரூட்டை அதிக முறை டெஸ்ட் போட்டிகளில் அவுட்டாக்கிய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். இதிலிருந்து ஜோ ரூட்டை அசால்டாக அவுட் செய்து அடக்குவதில் ஜடேஜா சிறந்தவராக செயல்பட்டு வருகிறார் என்றால் மிகையாகாது. அந்த பட்டியல்:
1. ரவீந்திர ஜடேஜா : 9* முறை
2. நேதன் லயன் : 8 முறை
3. ரவிச்சந்திரன் அஸ்வின் : 7 முறை
4. யாசர் ஷா : 6 முறை

Advertisement