9 ஃபோர்ஸ் 3 சிக்ஸ்.. 47 பந்தில் 50.. ரோஹித், சேவாக்கின் சாதனையை தூளாக்கிய ஜெய்ஸ்வால்.. தனித்துவ அதிரடி சாதனை

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த போதிலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தது.

அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்து நிலையில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் போராடி 70 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினார்கள்.

- Advertisement -

அதிரடி ஜெய்ஸ்வால்:
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடிய நிலையில் இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்பத்திலிருந்தே இங்கிலாந்து பவுலர்களை அடித்து நொறுக்க தொடங்கினார். அவருடைய அதிரடியால் வெறும் 6.3 ஓவரில் 41 பந்தில் 50 ரன்கள் தொட்ட இந்தியா அபாரமான துவக்கத்தை பெற்றது.

அதில் முதல் 4 ஓவர்களில் மட்டும் 27 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் முதல் 4 ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார். இதற்கு முன்பு கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியின் இன்னிங்ஸில் ஜாம்பவான் வீரேந்திர சேவாக் 25 ரன்கள் அடித்திருந்தார்.

- Advertisement -

அவருக்கு நிகராக கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியின் இன்னிங்சில் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவும் முதல் 4 ஓவரில் அதிகபட்சமாக 25 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் அவர்களை இந்த போட்டியில் மிஞ்சி அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 47 பந்துகளிலேயே அரை சதம் கடந்து இந்தியாவுக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்தார். அவருடைய அதிரடியால் முதல் நாள் முடிவில் இந்தியா 119/1 ரன்கள் குவித்து இன்னும் 127 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.

இதையும் படிங்க: யாருமே தொட முடியாத உச்சம்.. 2023 முக்கிய ஐசிசி விருதை வென்ற கிங் கோலி.. புதிய உலக சாதனை

கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் கில் 14*, ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி 3 சிக்சருடன் 76* (70) ரன்களுடன் உள்ளனர். குறிப்பாக இந்த தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று வாயில் மட்டும் சொன்ன இங்கிலாந்துக்கு செயலில் அடித்து காட்டி வரும் ஜெய்ஸ்வால் பதிலடி கொடுத்து வருகிறார். எனவே 2வது நாள் ஆட்டத்தில் அவர் சதமடித்து சாதனை படைக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement