ரோஹித்தின் சொல்பேச்சை கேட்காத ரவீந்திர ஜடேஜா. பெவிலியனில் இருந்து கோபத்தை ரோஹித் – நடந்தது என்ன?

Rohit-and-Jadeja
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியானது இன்று நவம்பர் 2-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் குசால் மெண்டிஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

இந்த போட்டியின் போது பின் வரிசையில் களமிறங்கிய இந்திய அணி ரவிந்திர ஜடேஜா 24 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 35 ரன்கள் குவித்து அதிரடி காட்டி இறுதிநேரத்தில் இந்திய அணியின் ரன் குவிப்பை அதிகரிக்க உதவினார்.

இருப்பினும் இந்த போட்டியின் கடைசி ஓவரின் போது ரோஹித் சர்மாவின் ஆலோசனையை மதிக்காத ரவீந்திர ஜடேஜா செய்த செயல் கேப்டன் ரோகித் சர்மாவை கோபம் அடையச் செய்ததை செய்தது. மேலும் கோபத்தில் ரோகித் சர்மா அதிருப்தி அடைந்தது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் 49-வது ஓவரின் முடிவில் இந்திய அணிக்கு 350 ரன்களை கடந்தது. அதனால் கடைசி ஓவர் முழுவதுமாக ரவீந்திர ஜடேஜாவை விளையாடச் சொல்லி ரோஹித் சர்மா பெவிலியனில் இருந்து கைகாட்டினார். குறிப்பாக ஆறு விரல்களை காட்டிய அவர் 6 பந்துகளையும் நீங்களே சந்திக்க வேண்டும் என்று ரவீந்திர ஜடேஜாவிடம் சைகை செய்தார்.

இதையும் படிங்க : கிளன் மேக்ஸ்வெலை விட காட்டுத்தனமாக அடித்த ஸ்ரேயாஸ்.. புதிய சாதனை.. இலங்கையை நொறுக்கிய இந்தியா

இதனை பார்த்த ஜடேஜாவும் கடைசி ஓவரின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார். ஆனால் அந்த ஓவரின் இரண்டாவது பந்தை சந்திக்கும் போது அவர் தேவையில்லாமல் ஒரு ரன் ஓடினார். இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா கோபத்தை வெளிப்படுத்தினார். அந்த கடைசி ஓவரில் தட்டு தடுமாறி 5 ரன்கள் கிடைக்க இந்திய அணி 357 ரன்களை குவித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement