கபில் தேவ், அஷ்வினை தொடர்ந்து 3 ஆவது இந்திய வீரராக ரவீந்திர ஜடேஜா படைத்த மாஸ் சாதனை – அதும் சொந்த ஊர்ல வந்திருக்கு

Jadeja-Ashwin-Kapil
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கெதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியில் விளையாடி வருகிறது. ஏற்கவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் இன்று பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கிய இந்த மூன்றாவது போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல்நாள் ஆட்டநேர முடிவில் தங்களது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்துள்ளது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக கேப்டன் ரோஹித் சர்மா 131 ரன்களை குவித்து ஆட்டமிழந்த வேளையில் ரவீந்திர ஜடேஜா முதல்நாள் முடிவு வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று 110 ரன்களை குவித்துள்ளார். இதில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடக்கம். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஜடேஜா அடிக்கும் 4 ஆவது சதமாகவும் பதிவாகியுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா இரண்டாவது டெஸ்ட் போட்டியை காயம் காரணமாக தவற விட்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது மூன்றாவது போட்டியில் மீண்டும் கம்பேக் கொடுத்த அவர் ராஜ்கோட் நகரில் தனது சொந்த மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் இன்று அடித்த 110 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இந்திய வீரராக மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றிலும் இணைந்துள்ளார். அந்த வகையில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த வீரர்களாக கபில்தேவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர்.

இதையும் படிங்க : அறிமுக போட்டியிலேயே 104.20 ஸ்ட்ரைக் ரேட்டில் பஸ்பால் ஆடிய சர்பராஸ் கான்.. பாண்டியாவின் சாதனை சமன்

கபில் தேவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5248 ரன்களையும், 434 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோன்று அஸ்வின் 3271 ரன்களையும், 499 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து தற்போது ஜடேஜா இன்று அடித்த 110 ரன்களோடு சேர்த்து மொத்தமாக 3003 ரன்கள் மற்றும் 280 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் மூன்றாவது வீரராக இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement