கடைசி 22 மேட்ச்ல 10 விக்கெட் தானா? ஜடேஜாவிடம் உள்ள வீக்னஸ் – ரோஹித் சர்மா என்ன பண்ணுவாரோ பாவம்

Jadeja
- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இலங்கை நாட்டிற்கு சென்றடைந்துள்ளது. இந்தியாவில் எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்த ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அந்த அதே உத்வேகத்துடன் உலககோப்பை தொடரிலும் பங்கேற்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் ஒருநாள் பவுலிங் ரெக்கார்டு ரசிகர்களை சற்று வருத்தத்திற்கு உள்ளாக்கும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மிகச் சிறப்பான வீரராக திகழ்ந்துவரும் ஜடேஜா பேட்டிங்கில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

அதேபோன்று பந்து வீச்சிலும் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு போதுமான பங்களிப்பை வழங்கினாலும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை சற்று மோசமான செயல்பாட்டையே பந்துவீச்சில் வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா பேட்டிங்கில் 49 ரன்கள் சராசரியுடன் 448 ரன்கள் எடுத்து இருந்தாலும், 22 போட்டிகளில் பந்துவீசி வெறும் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இப்படி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுக்க தடுமாறி வருவது ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிப்படையாக தெரிகிறது.

- Advertisement -

எனவே எதிர்வரும் இந்த இரு தொடர்களிலும் அவரின் பந்துவீச்சு எவ்வாறு அமையப் போகிறது? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது. அதோடு ஜடேஜாவை ரோகித் சர்மா எவ்வாறு பயன்படுத்த போகிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அணியில் இடம் பெறுவார்கள் என்பதனால் ஜடேஜாவை சரியாக பயன்படுத்தி அவரிடம் இருந்து மீண்டும் முழு பந்துவீச்சு திறனை வெளிக்கொணர வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க : அவர் மிடில் ஆர்டர்ல விளையாட மாட்டாருன்னு யார் சொன்னா? இந்தாங்க ஆதாரம் – இளம் வீரருக்கு அஸ்வின் ஆதரவு

பேட்டிங்கில் தற்போது உச்சகட்ட பார்மில் இருக்கும் ஜடேஜா பந்துவீச்சிலும் கை கொடுத்தால் நிச்சயம் இந்திய அணி எளிதாக பல போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement