அவர் மிடில் ஆர்டர்ல விளையாட மாட்டாருன்னு யார் சொன்னா? இந்தாங்க ஆதாரம் – இளம் வீரருக்கு அஸ்வின் ஆதரவு

Ravichandran Ashwin 9
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கண்டத்தின் டாப் 2 அணிகளான இவ்விரு அணிகளில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி போன்ற தரமான வீரர்கள் இருப்பதால் அனல் பறக்கப் போகும் இப்போட்டியை பார்ப்பதற்கு அனைவரிடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடுவதால் நம்பர் 4வது பேட்ஸ்மேன் பிரச்சனை தீர்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆனால் கேஎல் ராகுல் பயிற்சிகளின் போது மீண்டும் லேசான காயத்தை சந்தித்ததால் இந்த ஆசிய கோப்பையின் முதலிரண்டு போட்டியில் விளையாட மாட்டார் என்பது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் தொடக்க வீரராக விளையாடி தடுமாறிய அவர் ரிஷப் பண்ட்க்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்று கடந்த ஜனவரி, பிப்ரவரியில் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடர்களில் மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

- Advertisement -

அஸ்வின் ஆதரவு:
அதனால் ரிஷப் பண்ட்க்கு பதிலாக விக்கெட் கீப்பராக உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு ஆள் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் தற்போது காயத்தை சந்தித்துள்ள அவருக்கு பதிலாக இஷான் கிசான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் உள்ளூர் முதல் சர்வதேசம் வரை தம்முடைய கேரியரில் பெரும்பாலும் தொடக்க வீரராக விளையாடிய அவர் கடந்த டிசம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்து சாதனை படைத்தார்.

எனவே ரோஹித் சர்மா, கில், விராட், ஸ்ரேயாஸ் ஆகியோர் டாப் 4 இடங்களில் கண்டிப்பாக விளையாடுவார்கள் என்ற நிலைமையில் திடீரென இந்த தொடரில் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடி அவரால் சாதிக்க முடியுமா என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் 2020 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியில் இஷான் கிசான் 4வது இடத்தில் விளையாடி வெற்றிகரமாக செயல்பட்டு தொடர்நாயகன் விருது வென்றதை மறக்காதீர்கள் என ரவிச்சந்திரன் அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எனவே இத்தொடரில் அவரால் மிடில் ஆர்டரில் சாதிக்க முடியும் என்று தெரிவிக்கும் அஸ்வின் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நீங்கள் தொடர்ச்சியாக சோதனை செய்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். தற்சமயத்தில் வலுவான மற்றும் சமநிலையான அணியாக கருதப்படும் இங்கிலாந்து கூட ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகம் சோதனைகளை செய்வதில்லை. ஏனெனில் அவர்களுடைய டாப் 3 வீரர்கள் மாறாமல் விளையாடுகின்றனர். ஒருவேளை சோதனைகள் செய்தாலும் அதை 30 ஓவர்களுக்கு பின் செய்கின்றனர்”

இதையும் படிங்க: அதுல விராட் கோலி புத்திசாலித்தமான இருக்காரு ஆனா ரோஹித் சர்மா ரொம்ப மோசம் – சல்மான் பட் விமர்சனம்

“இந்த சூழ்நிலையில் துபாயில் நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இஷான் கிசான் தொடர்நாயகன் விருது வென்றதை மறக்காதீர்கள். அந்தத் தொடரில் அவர் தொடக்க வீரராக விளையாடவில்லை. மாறாக 4வது இடத்தில் தான் விளையாடினார்” என்று கூறினார். அவர் கூறுவது போல தம்முடைய ஐபிஎல் கேரியரில் அதிகபட்சமாக 2020 சீசனில் அடித்த 516 ரன்களை 4வது இடத்தில் களமிறங்கியே இஷான் கிசான் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement