IND vs WI : முதல் போட்டியிலேயே கபில் தேவின் மாபெரும் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்த – ரவீந்திர ஜடேஜா

Jadeja-and-Kapil
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜூலை 27-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் இந்திய அணி பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 23 ஓவர்களிலேயே 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

IND-vs-WI

- Advertisement -

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் நான்கு விக்கெடுக்களையும், ஜடேஜா மூன்று விக்கெடுக்களையும் கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவின் மாபெரும் சாதனையை ஒன்றினை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Jadeja

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வேதேச ஒருநாள் போட்டிகளில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் பந்துவீச்சாளராக இருந்த கபில் தேவை பின்னுக்கு தள்ளி தற்போது ஜடேஜா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவரை 43 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் முதலிடத்திலும், 41 விக்கெட்டுகளுடன் அணில் கும்ப்ளே இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 41 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஜடேஜா இந்த ஒரு நாள் தொடரின் ஏதாவது ஒரு போட்டியில் கபில் தேவியின் சாதனையை முறியடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முதலாவது போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி கபில் தேவை பின்னுக்கு தள்ளி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs WI : குறைந்த இலக்கை சேசிங் செய்ய இவ்ளோ போராட்டமா? வெ.இ பந்து வீச்சில் திணறிய இந்தியா – போராடி வென்றது எப்படி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மட்டும் இந்த முதலாவது போட்டியில் எடுத்த 3 விக்கெட்டுகளோடு சேர்த்து அவர் 44 விக்கெட்டை கைப்பற்றி அசத்தியுள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக கார்ட்னி வால்ஸ் 45 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். நிச்சயம் அடுத்த போட்டியில் அவரையும் ஜடேஜா மிஞ்சுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement