ஒரு வெற்றி கூட வரல. அதுக்குள்ள வரலாற்றில் படுமோசமான அவப்பெயரை பெற்ற ரவீந்திர ஜடேஜா

Jadeja-2
- Advertisement -

நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வருவது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வருடம் ஐபிஎல் தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக கேப்டனாக இருந்து வந்த நட்சத்திரம் எம்எஸ் தோனி திடீரென கேப்டன் பதவியில் இருந்து விலகினார். கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் சென்னையை தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக வெற்றிப் பாதையில் அழைத்து வந்த அவர் ஒவ்வொரு வருடமும் எப்படியாவது பிளே-ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுவிடுவார்.

MS Dhoni Jadeja

- Advertisement -

அந்த வகையில் மொத்தம் 12 வருடங்களில் சென்னைக்கு கேப்டன்ஷிப் செய்த அவர் 11 வருடங்கள் பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று 9 வருடங்கள் இறுதிப்போட்டியில் விளையாட வைத்து 4 கோப்பைகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான அணியாக சென்னையை ஜொலிக்க வைத்த அவர் 2-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டன் என்ற பெருமையுடன் சாதனை படைத்து வந்த நிலையில் 40 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறைக்கு வழி விடும் வண்ணம் இந்த முடிவை எடுத்தார்.

புதிய கேப்டன் ஜடேஜா:
அத்துடன் காலம் காலமாக வகித்து வந்த கேப்டன்ஷிப் பொறுப்பை நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்த அவர் ஒரு சாதாரண வீரராக விளையாடும் முடிவெடுத்தார். மறுபுறம் இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜாவுக்கு தோனி ஆதரவாக இருப்பார் என்பதால் சென்னை ரசிகர்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர். ஆனால் அந்த நிம்மதியை முதல் போட்டியிலிருந்தே சீர்குலைக்கும் வகையில் விளையாடிய சென்னை மோசமான பேட்டிங் மற்றும் பந்து வீச்சு காரணமாக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து.

Jadeja

கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் மோசமான பேட்டிங் காரணமாக தோல்வியடைந்த அந்த அணி லக்னோவுக்கு எதிரான 2-வது போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 210 ரன்கள் குவித்த நிலையில் அதற்கு ஈடாக வள்ளல் பரம்பரையாக மாறிய சென்னை பவுலர்கள் 211 ரன்களை வாரி வழங்கி வெற்றியையும் எதிரணியிடம் பரிசளித்தனர். அதன் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஐபிஎல் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை பதிவு செய்த சென்னை ஆரம்பத்திலேயே திண்டாடியது.

- Advertisement -

அவப்பெயரை பெற்றுள்ள ஜடேஜா:
அந்த நிலையில் பஞ்சாப்க்கு எதிரான 3-வது போட்டியில் தங்களது அணி மீண்டெழும் என எதிர்பார்த்த சென்னை ரசிகர்களுக்கு மீண்டும் பேட்டிங்கில் சொதப்பிய சென்னை வெறும் 126 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மீண்டும் படுதோல்வியை பரிசளித்தது. அதன் காரணமாக சென்னையின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரவிந்திர ஜடேஜா முதல் வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பாகவே ஐபிஎல் வரலாற்றில் முதல் 3 போட்டிகளில் தோற்று ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்த முதல் சென்னை கேப்டன் என்ற பரிதாப பெயருக்கு உள்ளானார்.

PBKS vs CSK

அந்த நிலையில் மேலும் ஒரு அடியாக நேற்று ஹைதெராபாத் அணிக்கு எதிராக நடந்த 4-வது போட்டியிலும் ஜடேஜா தலைமையில் மண்ணை கவ்விய சென்னை மீண்டும் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இத்தனைக்கும் அவருக்கு உறுதுணையாக தோனி இருக்கும் போதிலும் அவரால் வெற்றியை பெற முடியவில்லை.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது புள்ளிப் பட்டியலில் 10-வது இடத்தை பிடித்திருக்கும் சென்னை இதிலிருந்து மீண்டெழுந்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்பதே சந்தேகமாகியுள்ளது. இதனால் முதலில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற சொல்லுங்கள் பின்பு கோப்பையை தக்க வைப்பது பற்றி பார்க்கலாம் என எதிரணி ரசிகர்கள் சென்னையை கலாய்த்து வருகின்றனர்.

CSK-1

வரலாற்றில் மோசமான அவப்பெயர்:
இந்நிலையில் இந்த வருடம் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜடேஜா தலைமையில் முதல் 4 போட்டிகளிலும் சென்னை அடுத்தடுத்து தோல்வி அடைந்துள்ளதால் “ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன்” என்ற படுமோசமான சரித்திரத்திற்கு ரவீந்திர ஜடேஜா சொந்தமாகியுள்ளார். இதற்கு முன் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் கேப்டனாக பொறுப்பேற்ற எந்த ஒரு கேப்டனும் தனது முதல் 4 போட்டிகளில் இப்படி தோல்வியை பதிவு செய்ததே கிடையாது.

- Advertisement -

அதேபோல் எம்எஸ் தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குப் பின் சென்னையின் 3-வது கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவீந்திர ஜடேஜா முதல் 4 போட்டிகளில் தோல்வியை பதிவு செய்த முதல் சென்னை கேப்டன் என்ற பெயரையும் பெற்றுள்ளார். ஏனெனில் இதற்கு முன் தோனி கேப்டன்ஷிப் செய்த முதல் 4 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்த நிலையில் சுரேஷ் ரெய்னா கேப்டன்ஷிப் செய்த முதல் 4 போட்டிகளில் முதலில் வெற்றியும் அதற்கடுத்த 3 போட்டிகளில் தோல்வியையும் பதிவு செய்தார்.

இதையும் படிங்க : இப்படியே நடந்தா நான் ரிட்டயர்டு ஆயிடுவேன். சி.எஸ்.கே மீட்டிங்கில் வருத்தமாக பேசிய தல தோனி – விவரம் இதோ

மொத்தத்தில் ஒரு வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பாகவே இப்படி சரித்திரத்தில் மோசமாக தனது பெயரை பதிவு செய்திருக்கும் ரவீந்திர ஜடேஜா பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் பேட்டிங்கும் பாதிக்கப்பட்டுள்ளதால் இவர் கேப்டன்ஷிப் செய்வதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.

Advertisement