இப்படியே நடந்தா நான் ரிட்டயர்டு ஆயிடுவேன். சி.எஸ்.கே மீட்டிங்கில் வருத்தமாக பேசிய தல தோனி – விவரம் இதோ

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் எப்போதுமே ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆதரவைப் பெற்று பலமான அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சி.எஸ்.கே அணியானது நடப்பு சாம்பியன் என்கிற ஒரு கௌரவத்துடன் இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடரில் களமிறங்கியது.

CSK-1

- Advertisement -

ஆனால் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறியதால் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் சென்னை அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முதல் நான்கு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து தற்போது பரிதாப நிலையில் உள்ளது.

இதனைத்தொடர்ந்து இனிவரும் போட்டிகளில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும். அதோடு இனி எந்த ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் கிட்டத்தட்ட சிஎஸ்கே அணி இந்தத் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது கேள்விக்குறியாகிவிடும்.

CSK-2

இந்நிலையில் இந்த நான்கு தொடர் தோல்விகளுக்கு பிறகு முன்னாள் கேப்டன் தோனி, சிஎஸ்கே வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் என அனைவரும் ஒன்றினைத்து ஒரு மீட்டிங்கில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த மீட்டிங்கில் சிஎஸ்கே அணி வீரர்களின் செயல்பாடு குறித்து மிகவும் வருத்தத்துடன் தோனி பேசியதாகவும் கூறப்படுகிறது. அப்படி அந்த மீட்டிங்கில் தோனி பேசியதாவது :

- Advertisement -

இன்னும் இரண்டு போட்டிகளில் நாம் தோற்றால் கூட இந்த தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு நாம் முன்னேறுவது கடினம் ஆகிவிடும். எனவே தயவுசெய்து உங்களால் முடிந்த அனைத்தையும் இனிவரும் போட்டிகளில் செய்யுங்கள். பயிற்சியில் சிறப்பாக செயல்படும் நீங்கள் போட்டியின்போது எப்படி சொதப்புகிறீர்கள் என்பது எனக்கு தெரியவில்லை. இப்படியே நாம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நான் அணியில் இருந்து விலகி வேறு ஒருவருக்கு என் இடத்தை கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நட்சத்திர ஆர்சிபி வீரரின் குடும்பத்தில் நிகழ்ந்த இறப்பு! அடுத்த போட்டியில் பங்கேற்பாரா – வெளியான தகவல் இதோ

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இனிவரும் போட்டிகளில் மீண்டும் நீங்கள் சொதப்பினால் நிச்சயம் நான் அதைத்தான் செய்வேன் வேறுவழியில்லை. தயவு செய்து எனக்காக சிறப்பாக விளையாடுங்கள். இந்த தொடரின் இடையிலயே என்னை ஓய்வே அறிவிக்க வைத்து விடாதீர்கள் என்று தோனி உருக்கமாக பேசியதாக கூறப்படுகிறது.

Advertisement