நட்சத்திர ஆர்சிபி வீரரின் குடும்பத்தில் நிகழ்ந்த இறப்பு! அடுத்த போட்டியில் பங்கேற்பாரா – வெளியான தகவல் இதோ

RCB vs MI
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடந்த 18-வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையான மும்பையை தோற்கடித்த பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 151/6 ரன்கள் சேர்த்தது. ஏனெனில் 50/0 என சிறப்பாக தொடங்கிய அந்த அணி திடீரென பெங்களூருவின் அதிரடியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 62/5 என தடுமாறியது. அப்போது களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் உட்பட 68* ரன்கள் குவித்து மூழ்கிய மும்பையை தனி ஒருவனாக தூக்கி நிறுத்தினார்.

Suryakumar yadhav MI vs RCB.jpeg

- Advertisement -

பெங்களூரு ஹாட்ரிக் வெற்றி:
அதை தொடர்ந்து 152 என்ற எளிதான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் டு பிளேஸிஸ் மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அப்போது டுப்லஸ்ஸிஸ் 16 (24) ரன்களில் அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த இளம் வீரர் அனுஜ் ராவத் 47 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்சர் உட்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் நட்சத்திரம் விராட் கோலி 48 (36) ரன்கள் எடுத்ததால் 18.3 ஓவர்களில் 152/3 ரன்களை எடுத்த பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் இந்த வருடம் பங்கேற்ற முதல் போட்டியை தவிர்த்து அடுத்த 3 போட்டிகளில் மீண்டெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்துள்ள பெங்களூரு ஹாட்ரிக் வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் மின்னுகிறது. மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் அடுத்தடுத்த மோசமான தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடுகிறது.

Anuj Rawat

ஹர்ஷல் படேல் குடும்பத்தில் அதிர்ச்சி:
முன்னதாக இந்த போட்டியில் வெறும் 15 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் உட்பட 26 ரன்கள் எடுத்து மிரட்டி கொண்டிருந்த மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவை அற்புதமாக பந்துவீசிய இந்திய வீரர் ஹர்ஷல் படேல் முதல் விக்கெட்டை எடுத்து போட்டியை பெங்களூருவின் பக்கம் திருப்பினார். அதில் சரியத் தொடங்கிய அந்த அணி கடைசி வரை மீள முடியாமல் தோல்வி அடைந்தது. நேற்றைய போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஹர்ஷல் படேல் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 2 முக்கியமான விக்கெட்டுகளை சாய்த்து பெங்களூருவின் வெற்றியில் முக்கியப் பங்காற்றினார்.

- Advertisement -

அதனால் பெங்களூருவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அவருக்கு இரவு நேரத்தில் அவரின் குடும்பத்தில் இருந்து திடீரென ஒரு மாபெரும் அதிர்ச்சி செய்தி வந்தது. ஆம் அவரின் அன்பு செல்லத் தங்கை இறந்து விட்டதாக வந்த அந்த செய்தியை கேட்ட ஹர்ஷல் படேல் மனமுடைந்து அதிர்ச்சியில் உறைந்தார்.

Harshal

தொடர்ந்து விளையாடுவாரா:
அந்த அதிர்ச்சி செய்தியை அடுத்து உடனடியாக பெங்களூர் அணியின் கட்டுப்பாட்டு வளையத்தில் இருந்து வெளியே வந்த அவர் தனது தங்கையை பார்த்து இறுதி சடங்குகளில் ஈடுபடுவதற்காக தனது வீட்டிற்கு அவசர அவசரமாக திரும்பினார். இது பற்றி ஐபிஎல் நிர்வாகி ஒருவர் பேசியது பின்வருமாறு. “குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு மோசமான நிகழ்வு காரணமாக துரதிருஷ்டவசமாக ஹர்ஷல் படேல் கட்டுப்பாட்டு வளையத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அது அவரின் தங்கை ஆவார். அதன் காரணமாக புனேவிலிருந்து மும்பைக்கு புறப்பட்ட பெங்களூரு அணி பேருந்தில் அவர் இடம் பெறவில்லை” என கூறினார்.

- Advertisement -

இந்த செய்தி பெங்களூர் அணியில் இருந்த இதர வீரர்களையும் அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் அவர் பெங்களூர் அணியில் இருந்து விலகியது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். ஏனெனில் கடந்த வருட ஐபிஎல் தொடரில் அதிரடியாக பந்துவீசிய அவர் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலராக சாதனை படைத்து ஊதா தொப்பியை வென்றதுடன் தொடர்நாயகன் விருதையும் வென்று சாதனை படைத்தார்.

harshal 2

அதன் காரணமாக இந்திய அணிகளும் விளையாடத் தொடங்கிய அவர் தற்போது பெங்களூர் அணியில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். அப்படிப்பட்ட நிலையில் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி சென்னைக்கு எதிராக நடைபெறும் பெங்களூருவின் அடுத்த போட்டிக்கு முன்பாக அவர் பெங்களூர் அணியில் இணைவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : வரலாற்றிலேயே முதல் முறை! வித்யாச முடிவால் பல்ப் வாங்கிய மும்பை, தோல்வியை பரிசளித்த பெங்களூரு

இருப்பினும் அதன்பின் அவர் ஒரு சில நாட்கள் கட்டுப்பாட்டு வளையதிற்குள் இருக்க வேண்டும் என்பதால் சென்னைக்கு எதிரான அடுத்த போட்டியில் பெங்களூருவுக்காக களமிறங்குவாரா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement