முதல் டெஸ்ட் போட்டியில் இனி தமிழக வீரர் அஷ்வின் அந்த சாதனையை படைக்க வாய்ப்பில்லை – வெயிட் பண்ணிதான் ஆகனும்

Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு சுருண்டது.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக தங்களது முதல் இன்னிங்ஸ்சில் 436 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய இங்கிலாந்து அணியானது எளிதில் இந்திய அணியிடம் வீழ்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை குவித்துள்ளது.

இதன் காரணமாக 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி இன்று நான்காம் நாள் ஆட்டத்தினை தொடர்ந்து வருகிறது. இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டை கைப்பற்றிய தமிழக வீரர் அஸ்வின் இரண்டாவது இன்னிங்சிலும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

- Advertisement -

இருப்பிடம் இந்த இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் இன்னும் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 495 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் தனது 500-வது விக்கெட்டிற்காக மேலும் ஒரு போட்டி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அவர பாக்கும் போது ரிஷப் பண்ட் மாதிரி இருக்கு.. இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

ஏனெனில் எஞ்சியுள்ள நான்கு விக்கெட்டுக்களையும் அவர் வீழ்த்தினாலும் 499 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடியும் என்பதனால் அவர் தனது 500-வது டெஸ்ட் விக்கெட்டுகாக அடுத்த போட்டி வரை காத்திருக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement