அவர பாக்கும் போது ரிஷப் பண்ட் மாதிரி இருக்கு.. இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் நகரில் இந்தியா விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதில் முதலாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த உதவியுடன் 246 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 436 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 80, கே.எல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 316 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஓலி போப் சதமடித்து 148* ரன்கள் குவித்ததால் தற்சமயத்தில் இங்கிலாந்து 126 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றிக்கு போராடி வருகிறது.

- Advertisement -

அஸ்வின் பாராட்டு:
முன்னதாக இந்த தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று எச்சரித்த இங்கிலாந்தை முதல் நாளிலேயே அடித்து நொறுக்கிய ஜெயஸ்வால் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 80 (74) ரன்கள் குவித்து அசத்தினர். குறிப்பாக 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் இங்கிலாந்துக்கு உண்மையான பஸ்பால் ஆட்டத்தை காண்பித்ததாக ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

இந்நிலையில் ஜெய்ஸ்வால் விளையாடுவதை பார்க்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிசப் பண்ட் அதிரடியாக விளையாடுவதை பார்ப்பது போல் இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் அபாரமான நேரத்தை கொண்ட ஜெய்ஸ்வால் முதல் தர கிரிக்கெட்டிலும் அற்புதமான துவக்கத்தை பெற்றுள்ளார். அவருடைய ஆட்டத்தை நான் மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன்”

- Advertisement -

“குறிப்பாக அதில் ரிஷப் பண்ட்டை நான் பார்க்கிறேன். பயமற்ற கிரிக்கெட் அவருக்கு சேவையாற்றுகிறது. ஜெய்ஸ்வால் தவறான காலை எடுத்து வைக்கவில்லை. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை தண்ணீருக்குள் நுழைந்த மீன் போல எடுத்து விளையாடுகிறார்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதமடித்த வீரராக சாதனை படைத்த ஜெய்ஸ்வால் கடந்த 2023 வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அறிமுகமானார்.

இதையும் படிங்க: 1 – 0ன்னு ஜெயிச்சுட்டாரு.. இதே சீரிஸ்ல பதிலடி கொடுப்பேன்.. தம்மை அவுட்டாக்கிய இந்திய பவுலருக்கு ரூட் சவால்

அதில் முதல் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்த அவர் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினார். அந்த வகையில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement