1 – 0ன்னு ஜெயிச்சுட்டாரு.. இதே சீரிஸ்ல பதிலடி கொடுப்பேன்.. தம்மை அவுட்டாக்கிய இந்திய பவுலருக்கு ரூட் சவால்

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 436 ரன்கள் குவித்து இங்கிலாந்தை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றது.

அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 80, கேஎல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 316 ரன்கள் எடுத்து இந்தியாவை விட 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

போட்டி தொடரும்:
அந்த அணிக்கு ஓலி போப் சதமடித்து 148* ரன்கள் குவித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். முன்னதாக ஓரளவு சுழலுக்கு சாதகமாக இருக்கும் ஹைதராபாத் மைதானத்தில் அஸ்வின், ஜடேஜா போன்ற ஸ்பின்னர்களுக்கு நிகராக ஜஸ்பிரித் பும்ராவும் தன்னுடைய தரமான வேகத்தை பயன்படுத்தி இதுவரை 4 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் போராடி வருகிறார்.

குறிப்பாக 2வது இன்னிங்சில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டை வெறும் 2 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் தம்மை அவுட்டாக்கிய பும்ராவை இதே தொடரின் அடுத்து வரும் போட்டிகளிலும் சிறப்பாக எதிர்கொண்டு பதிலடி கொடுப்பேன் என்று ஜோ ரூட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இப்போட்டியில் இப்போது நான் களத்தில் நிற்காதது எரிச்சலூட்டுகிறது. ஆனால் தரமான பவுலரான பும்ராவிடம் நிறைய திறமை மற்றும் வேகம் இருக்கிறது. இருப்பினும் இந்த டெஸ்ட் போட்டியில் அதைத்தான் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். பும்ரா ஓவர்களில் பெரிய ரன்கள் அடிக்காதது எனக்கு ஏமாற்றமாக அமைந்தது. அவர் 4 அல்லது 5 ஓவர்களில் தன்னுடைய அனைத்து திறமையும் எங்கள் மீது வீசுவார் என்பதை நீங்கள் அறிவீர்கள்”

இதையும் படிங்க: எந்த அழுத்தமும் இல்ல.. இங்கிலாந்து எப்படி ஆடுனாலும் நாங்க அதை பற்றி கவலைப்படல.. இந்திய கோச் பேட்டி

“எனவே இப்போதைக்கு அவர் 1 – 0 என வெற்றி பெற்றுள்ளார். சொல்லப்போனால் நானும் அவரை ஏற்கனவே அவுட் செய்துள்ளேன். அதனால் எங்களுடைய போட்டி 1 – 1 என வைத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு இடையேயான இந்த போட்டி இத்தொடர் முழுவதும் தொடரும் என்று உறுதியாக சொல்வேன்” என கூறினார். அந்த வகையில் பும்ரா – ரூட் மோதுவதை பார்ப்பது ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement