எந்த அழுத்தமும் இல்ல.. இங்கிலாந்து எப்படி ஆடுனாலும் நாங்க அதை பற்றி கவலைப்படல.. இந்திய கோச் பேட்டி

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஹைதராபாத் நகரில் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த உதவியுடன் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஜெய்ஸ்வால் 80, கே.எல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் எடுத்த உதவியுடன் 436 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 190 ரன்கள் தங்கிய நிலைமையில் களமிறங்கிய இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 316/6 ரன்கள் குவித்து இந்தியாவை விட 126 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

எந்த அழுத்தமும் இல்ல:
அந்த அணிக்கு ஓலி போப் சதமடித்து 148* ரன்கள் விளாசி இந்தியாவுக்கு சவாலை கொடுத்து வருகிறார். தற்போதைய நிலைமையில் ஒருவேளை இங்கிலாந்து 300 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கடினமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து எவ்வளவு பெரிய இலக்கை நிர்ணயித்தாலும் அதை பற்றி தாங்கள் கவலைப்படாமல் சேசிங் செய்ய தயாராக இருப்பதாக இந்தியாவின் பவுலிங் பயிற்சியாளர் ப்ராஸ் மாம்ப்ரே கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் எந்த வகையான இலக்கையும் எதிர்பார்க்கவில்லை. நாளை காலை விரைவாக விக்கெட்டுகளை எடுத்து அவர்களுடைய ஸ்கோரை குறைப்பதே எங்களுடைய இலக்காகும். எனவே எதிரணி கொடுக்கும் இலக்கிற்காக நாங்கள் எந்த அழுத்தத்தையும் எங்கள் மீது போட்டுக்கொள்ளவில்லை”

- Advertisement -

“நாங்கள் சரியான இடத்தில் பந்து வீசி சுழல் மற்றும் பவுன்ஸை பயன்படுத்த முயற்சிக்கிறோம். நாளை பிட்ச் இன்னும் சற்று மெதுவாக மாறும் என்று நினைக்கிறேன். அதில் சற்று சுழல் இருக்கலாம். ஆனால் இந்திய துணை கண்டத்தில் இருக்கும் மற்ற மைதானங்களை விட சற்று வித்தியாசமாக இருக்கலாம். அது கூர்மையானதாக இருக்கலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்காக எந்த வேலை கொடுத்தாலும்.. அதை வேற லெவலில் செய்றாரு.. நட்சத்திர வீரரை பாராட்டிய கும்ப்ளே

அவர் கூறுவது போல ஓலி போப்பை சாய்த்து இன்னும் ஒரு விக்கெட்டை எடுத்தால் இந்தியா இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும். குறிப்பாக 4வது நாளில் மைதானம் இன்னும் பேட்டிங்க்கு சவாலானதாக மாறும் என்பதால் அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகிய தரமான இந்திய பவுலர்கள் இங்கிலாந்தை விரைவில் அவுட் செய்வார்கள் என்று உறுதியாக நம்பலாம். எனவே 200 – 300 இலக்குக்குள் இங்கிலாந்தை கட்டுப்படுத்தினால் கூட இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement