இந்தியாவுக்காக எந்த வேலை கொடுத்தாலும்.. அதை வேற லெவலில் செய்றாரு.. நட்சத்திர வீரரை பாராட்டிய கும்ப்ளே

- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத் நகரில் ஜனவரி 25ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களும் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்களும் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 436 ரன்கள் குவித்து இங்கிலாந்தை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 80, கே.எல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 அக்சர் பட்டேல் 44 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்கள் சாய்த்தார்.

- Advertisement -

எந்த வேலை கொடுத்தாலும்:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 316/6 ரன்கள் குவித்து பதிலடி கொடுத்து வருகிறது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஓலி போப் சதமடித்து 148* ரன்கள் விளாசி சவாலை கொடுத்து வருகிறார். இந்நிலையில் இப்போட்டியில் சொந்த காரணங்களுக்காக விலகிய விராட் கோலி களமிறங்கக்கூடிய 4வது இடத்தில் பேட்டிங் செய்த கேஎல் ராகுல் தமக்கே உரித்தான கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 86 ரன்கள் குவித்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் துவக்க வீரராக விளையாடிய அவர் ரிஷப் பண்ட்க்கு பதிலாக விக்கெட் கீப்பராக 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அந்த வரிசையில் கடந்த மாதம் நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் விக்கெட் கீப்பராக விளையாடிய அவர் தற்போது இத்தொடரில் சாதாரண பேட்ஸ்மேனாக அசத்தி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் ஓப்பனிங், கீப்பர், மிடில் ஆர்டர் என இந்திய அணிக்காக கொடுக்கும் அனைத்து வேலைகளிலும் ராகுல் அசத்துவதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். இது பற்றி ஸ்போர்ட்ஸ்18 சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை போலவே டெஸ்ட் போட்டிகளிலும் அவர் மிடில் ஆர்டரில் விளையாட நகர்ந்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கீப்பராகவும் செயல்பட்ட அவர் 6வது இடத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தார்”

இதையும் படிங்க: அவர மாதிரி அனுபவசாலியை காசு கொடுத்து வாங்க முடியாது.. இந்திய வீரரை பாராட்டிய கெவின் பீட்டர்சன்

“தற்போது இத்தொடரில் 4வது இடத்தில் அவர் பேட்டிங் செய்கிறார். அவர் எந்த வகையான வேலைக்கும் தன்னை உட்படுத்திக் கொள்ளக்கூடிய திறமை கொண்டவர். வேகப்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய அவர் ஸ்பின்னர்களை நினைக்கும் நேரத்தில் அட்டாக் செய்யக் கூடியவர். தற்போது அவர் நல்ல மன இடைவெளியுடன் செயல்படுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் நல்ல வீரராக இருக்கும் போது இதுவே முக்கியம்” என்று கூறினார்.

Advertisement