அவர மாதிரி அனுபவசாலியை காசு கொடுத்து வாங்க முடியாது.. இந்திய வீரரை பாராட்டிய கெவின் பீட்டர்சன்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் நகரில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் முதலாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்கள் எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி 436 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 80, கேஎல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து விளையாடி வரும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 316/6 ரன்கள் எடுத்துள்ளது.

- Advertisement -

காசு கொடுத்து வாங்கமுடியாது:
அந்த அணிக்கு ஓலி போப் அபாரமான சதமடித்து 148* ரன்கள் குவித்து சவாலை கொடுத்து வருகிறார். அதனால் 126 ரன்கள் முன்னிலையில் இருக்கும் அந்த அணியை விரைவில் ஆல் அவுட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. முன்னதாக இந்த போட்டியில் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா பேட்டிங்கில் சவாலான மிடில் ஆர்டரில் 87 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வலு சேர்த்தார்.

இந்நிலையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா வளர்ந்த வீரராக முதிர்ச்சியை கண்டு பெரிய முன்னேற்றத்தை சந்தித்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் எந்த வகையான கிரிக்கெட்டிலும் அனுபவத்தை விலை கொடுத்து வாங்க முடியாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“உங்களுக்கு வயது அதிகரிக்கும் போது தான் முதிர்ச்சி கிடைக்கும். அப்போது தான் உங்களுடைய விளையாட்டையும் அணிக்கு என்ன தேவைப்படுகிறது என்பதையும் நீங்கள் அதிகமாக புரிந்து கொள்ள முடியும். மேலும் அணிக்குள் நீங்கள் நல்ல சூழ்நிலையில் இருப்பதாக உணர்வீர்கள். அந்த வகையில் ஜடேஜா வளர்ந்த வீரராக உருவெடுத்துள்ளார். அவர் வளரும் வீரர் கிடையாது”

இதையும் படிங்க: நம்பமுடியாத ஆட்டத்தை அவரு ஆடியிருக்காரு.. இன்னும் 45-50 ரன் அடிச்சா ட்ரிக்கி ஆயிடும் – இங்கிலாந்து வீரர் பேச்சு

“தற்போது நல்ல முதிர்ச்சியை கண்டுள்ள அவர் தன்னுடைய விளையாட்டை நன்றாக புரிந்துள்ளார். அந்த வகையில் களத்தில் நீங்கள் அதிக நேரத்தை செலவிடும் போது கச்சிதமாக உணர்வீர்கள். உங்களால் எப்போதும் போன்ற வீரர்களையும் அனுபவத்தையும் பணத்தை கொடுத்து வாங்க முடியாது. எனவே உங்களுடைய அனுபவ மிகுந்த வீரர் போட்டியை தெரிந்து கொள்ளும் போது உங்களுடைய அணி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது” என்று கூறினார்.

Advertisement