பல வருஷம் ஒன்னா விளையாடிருக்கோம்.. எங்க ஊர்ல தான் நடக்கணும்ன்னு விதி.. அஸ்வின் பற்றி ஜடேஜா பேட்டி

Ravindra Jadeja Ashwin
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்க உள்ளது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்றதால் இத்தொடர் சமனில் இருக்கிறது. எனவே மூன்றாவது போட்டியில் வென்று முன்னிலையை அதிகரிக்க இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் தயாராகி வருகின்றன.

அந்தப் போட்டியில் விராட் கோலி, கே.எல் ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்திய அணி களமிறங்க உள்ளது. முன்னதாக இத்தொடரில் இந்தியாவின் நட்சத்திர அனுபவ சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது போட்டியில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து கேரியரில் மொத்தம் 499 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

- Advertisement -

ஜடேஜா ஊரில் அஸ்வின்:
சொல்லப்போனால் கடந்த போட்டியிலேயே தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த 500வது விக்கெட் சாதனை முதல் இன்னிங்ஸில் அஸ்வின் ஒரு விக்கெட்டை கூட எடுக்காததால் தவறிப் போனது. எனவே அப்போட்டியில் தள்ளிப்போன 500வது விக்கெட்டை இப்போட்டியில் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற மாபெரும் வரலாற்றை அஸ்வின் படைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் தம்முடைய பார்ட்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் 500வது விக்கெட்டை தன்னுடைய சொந்த ஊரான ராஜ்கோட்டில் எடுக்க வேண்டும் என்பது விதி என ரவீந்திர ஜடேஜா கூறியுள்ளார். எனவே தங்களுடைய ஊரில் அஸ்வின் அந்த சாதனை படைப்பதை பார்க்க ஆர்வத்துடன் காத்திருப்பதாக தெரிவிக்கும் ஜடேஜா இது பற்றி போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அவர் 500வது விக்கெட்டை இங்கே எடுப்பார். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருடன் சேர்ந்து நான் கடந்த பல வருடங்களாக விளையாடி வருகிறேன். அந்த சாதனையை அவர் முதல் போட்டியிலேயே படைப்பார் என்று நான் நினைத்தேன். ஆனால் பரவாயில்லை. இது என்னுடைய சொந்த ஊரில் தான் நடக்க வேண்டும் என்பது விதியாக இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் நடைபெறும் ராஜ்கோட் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

முன்னதாக இரண்டாவது போட்டியில் காயத்தால் விளையாடாத ரவீந்திர ஜடேஜா தற்போது அதிலிருந்து குணமடைந்து மூன்றாவது போட்டியில் கம்பேக் கொடுக்க உள்ளார். அந்த போட்டியில் அஸ்வின் 500வது விக்கெட்டை எடுத்து சாதனை படைப்பார் என்று ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி காலை 9.30 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement