இந்தியா – இங்கிலாந்து 3வது டெஸ்ட் நடைபெறும் ராஜ்கோட் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

Rajkot Stadium
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. 2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கு 2வது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா பதிலடி கொடுத்தது.

எனவே 1 – 1* (5) என்ற கணக்கில் சமனில் இருக்கும் இத்தொடரில் முன்னிலை பெறுவதற்காக மூன்றாவது போட்டியில் வெல்லும் முனைப்புடன் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. அந்த வகையில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ராஜ்கோட் நகரில் உள்ளார் சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

ராஜ்கோட் மைதானம்:
கடந்த 2009இல் தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் 28000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் பால்கனியை போலவே ராஜ்கோட் மைதானத்திலும் செய்தியாளர்கள் அமரும் பால்கனி இருப்பது ஸ்பெஷலாகும். 2016 முதல் இதுவரை இங்கு 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது.

அந்த 2 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 1 வெற்றி 1 டிராவை சந்தித்துள்ளது. குறிப்பாக 2016இல் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது. இங்கு அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த வீரர்களாக விராட் கோலி மற்றும் புஜாரா முதலிடத்தில் (தலா 228) உள்ளனர். அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் விராட் கோலி : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2018

- Advertisement -

அதே போல இங்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை (9) எடுத்த வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் இருக்கிறார். இம்மைதானத்தில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் குல்தீப் யாதவ் : 5/57, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2018. இங்கு அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் பதிவு செய்த அணி : இந்தியா – 649/9, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2018.

வெதர் ரிப்போர்ட்:
ராஜ்கோட் நகரில் அடுத்த 5 நாட்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்று இந்திய மாநில மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
ராஜ்கோட் மைதானம் முதல் 2 நாட்களில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக சாதகமாக இருக்கும். இங்குள்ள பிட்ச்சில் சமமான பவுன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த மைதானத்தின் பவுண்டரி அளவுகள் சிறியது என்பதால் அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்றால் பெரிய ரன்கள் அடிக்கலாம். அதே போல வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல வேரியேஷன்களை பயன்படுத்தினால் விக்கெட்டுகள் தவறாது.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் 2 இந்திய வீரராகளுக்கு அறிமுக வாய்ப்பு – யார் அந்த 2 வீரர்கள்?

இருப்பினும் 3வது நாளிலிருந்து இந்தியாவின் மற்ற மைதானங்களைப் போலவே பயன்படுத்தப்பட்ட ராஜ்கோட் பிட்ச்சும் சுழலுக்கு சாதகமாக மாறலாம். அதில் ஸ்பின்னர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றியைத் தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். 593, 334, 228, 172 ரன்கள் என்பதே இந்த மைதானத்தில் நடைபெற்ற முந்தைய போட்டிகளின் அடிப்படையில் 4 இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோராகும். எனவே இப்போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement