- Advertisement -
உலக கிரிக்கெட்

இவ்ளோ காசா கேப்பீங்க.. ஏலத்தில் தமிழக வீரர் அஷ்வினை கண்டுகொள்ளாத அணிகள் – விவரம் இதோ

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழக கிரிக்கெட் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது அந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் தான் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்திருந்தார்.

ஐ.எல்.டி டி20 லீக்கில் விலைபோகாத ரவிச்சந்திரன் அஷ்வின் :

அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கே அணிக்காக மீண்டும் வாங்கப்பட்ட அவர் சென்னை அணிக்காக விளையாடியது ரசிகர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தாததால் அவர் அணியிலிருந்து கழட்டிவிடப்பட வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது.

- Advertisement -

இவ்வேளையில் நிர்வாகம் முடிவெடுக்கும் முன்னதாகவே தானாக முன்வந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். அதுமட்டும் இன்றி ஐபிஎல் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெற்றாலும் சர்வதேச நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாட இருப்பதாகவும் அதன்மூலம் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்க இருப்பதாகவும் அஸ்வின் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் ஏற்கனவே ஐ.எல்.டி டி 20, பிக் பேஷ் லீக் என முக்கிய டி20 லீக் தொடர்களின் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார். அதில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் லீக் தொடரில் அவர் டேவிட் வார்னரின் தலைமையின் கீழ் விளையாடுவது உறுதியாகிவிட்டது. இவ்வேளையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐ.எல்.டி டி20 லீக் தொடரிலும் தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்திருந்தார்.

- Advertisement -

எதிர்வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை ஐ.எல்.டி டி 20 தொடரின் நான்காவது சீசனானது நடைபெறவுள்ள வேளையில் அக்டோபர் 1-ஆம் தேதியான இன்று துபாயில் இந்த தொடருக்கான ஏலம் நடைபெற்றது. அதில் தனது அடிப்படை விலையாக அஸ்வின் 1 கோடிய 6 லட்சம் ரூபாய் என்ற விலையை அவர் நிர்ணயித்ததால் இவ்வளவு பெரிய தொகையை வழங்க விரும்பாத எந்த ஒரு அணியும் அவரை ஏலத்தில் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கே.எல் ராகுல் இந்த விடயத்தில் அசத்துராரு – வருண் ஆரோன் பேட்டி

அதோடு இந்த தொடரில் எந்த ஒரு வீரருக்கும் இவ்வளவு அதிகபட்ச விலை இல்லாத வேளையில் அஸ்வின் இவ்வளவு பெரிய தொகையை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்ததால் தான் அவர் ஏலத்தில் எடுக்கப்படாமல் போனார் என்றும் பலரும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -