முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கே.எல் ராகுல் இந்த விடயத்தில் அசத்துராரு – வருண் ஆரோன் பேட்டி

Varun Aaron
- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அப்படி புதிய கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரே அவருக்கு மிகப்பெரிய தொடராக அமைந்தது. இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி எவ்வாறு சமாளிக்கப் போகிறது? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அந்த தொடரினை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் இந்திய அணி டிரா செய்து அசத்தியது.

கே.எல் ராகுல் அசத்தலாக விளையாடுறாரு : வருண் ஆரோன்

அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி சார்பாக அனுபவ வீரர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அவர்களை தவிர்த்து முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணியாகவே இந்திய அணி இருந்தது. அந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒட்டுமொத்தமாகவே அசத்தலாக செயல்பட்டு இருந்தாலும் அனுபவ வீரரான கே.எல் ராகுல் பேட்டிங்கில் தனது முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிகச்சிறப்பான துவக்கத்தை அந்த தொடர் முழுவதுமே வழங்கியிருந்தார்.

- Advertisement -

பின்னர் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பங்கேற்று விளையாட இருக்கிறார். அக்டோபர் இரண்டாம் தேதி அகமதாபாத் நகரில் துவங்க இருக்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டிக்காக தற்போது கே.எல் ராகுல் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் அவர் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் பங்கேற்று விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இங்கிலாந்து தொடர் போன்று எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் கே.எல் ராகுல் அசத்துவார் என்றும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கே.எல் ராகுல் மிகச்சிறப்பாக ரன் குவித்து வருவதாகவும் முன்னாள் இந்திய வீரரான வருண் ஆரோன் அவரை பாராட்டி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதுள்ள இந்திய அணி முற்றிலும் புதுமையான ஒரு அணி. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட இந்த இந்திய அணியானது டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

- Advertisement -

குறிப்பாக இங்கிலாந்து தொடரில் நம்பிக்கையோடு விளையாடிய இந்திய வீரர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய வேளையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். கே எல் ராகுல் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அற்புதமான பேட்டிங் பார்ம் மூலம் ரன்களை குவித்து வருகிறார். துவக்க வீரருக்கான இடம் தான் அவருக்கு சரியான இடம் என்று நான் நினைக்கிறேன்.

இதையும் படிங்க : தேசிய கிரிக்கெட் அகாடெமியில் எல்லாமே இருக்கு.. நல்லாவே இருக்கு – யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பாராட்டு

முன்பெல்லாம் அவர் பெரியளவில் ரன்களை குவிக்காமல் இருக்கிறார் என்ற விமர்சனம் அவர்மீது இருந்து வந்த வேளையில் தற்போது மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர் ரன்களை குவித்து வருகிறார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணிக்காக அவர் எவ்வாறு ஆடினாரோ தற்போது அதே லெவல் ஃபார்மில் மிகச் சிறப்பான ஒரு ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருவதாகவும் கே.எல் ராகுலை வருண் ஆரோன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement