தற்செயலாக என் வாழ்க்கைல நடந்தது தான் இந்த விஷயம்.. 500 விக்கெட் வீழ்த்திய பிறகு – அஷ்வின் அளித்த பேட்டி

Ashwin
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கெதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் துவக்க வீரரான ஜாக் க்ராவிலியை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500-வது விக்கெட்டை பதிவு செய்தார். அதோடு உலகளவில் ஒன்பதாவது வீரராக 500 டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய பவுலராகவும் அஸ்வின் சாதனையை நிகழ்த்தினார்.

அதோடு இந்தியா சார்பில் கும்ப்ளேவிற்கு அடுத்து இரண்டாவது வீரராக ரவிச்சந்திரன் அஷ்வின் இந்த சாதனை மைல் கல்லை எட்டியுள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய அஸ்வின் தற்போது வரை 98 போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அவரது இந்த மாபெரும் சாதனைக்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவ்வேளையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் 500 விக்கெட் வீழ்த்தியது குறித்து பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில் :

நான் தற்செயலாக தான் ஸ்பின்னராக மாறினேன். உண்மையிலேயே நான் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே இருக்க விரும்பினேன். ஆனால் ஸ்பின்னராக மாற வாழ்க்கை எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது. நான் சிஎஸ்கே அணியின் டிரெஸிங் அறையில் நுழைந்தேன். ஆனால் அப்போது அணியில் இருந்த முத்தையா முரளிதரன் புதிய பந்தில் நான் பந்துவீசுவதை விரும்பவில்லை.

- Advertisement -

இறுதியில் புதிய பந்திலும் சிறப்பாக பத்துவீச கற்றுக் கொண்டேன். என்னுடைய முதல்தர கிரிக்கெட் பயணம் சிறப்பாக இருந்தது. இருப்பினும் ஐபிஎல் மேடை தான் என்னை பல பேரில் பார்வைக்கு கொண்டு சென்றது. இறுதியில் எனக்கு டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வாய்ப்பு கிடைத்தது.

இதையும் படிங்க : 500 விக்கெட் எடுத்த அஸ்வினையே தெறிக்க விட்டாரு.. 3வது நாளில் அதை செய்ங்க.. இந்தியாவுக்கு குக் ஆலோசனை

நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோது “நீயெல்லாம் ஒரு பவுலரா? உன்னால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நல்ல பந்துவீச்சாளராக மாற முடியுமா? என்பது போன்று பலர் என்னை சந்தேகப்பட்டார்கள். ஆனால் இன்று 13 வருடங்கள் ஆகிவிட்டது நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன். தற்போது உள்ள நிலையை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement