500 விக்கெட் எடுத்த அஸ்வினையே தெறிக்க விட்டாரு.. 3வது நாளில் அதை செய்ங்க.. இந்தியாவுக்கு குக் ஆலோசனை

Alastair Cook 3
- Advertisement -

ராஜ்கோட் நகரில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 132, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 207/2 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு ஜாக் கிராவ்லி 15, ஓலி போப் 39 ரன்களில் அவுட்டானாலும் பென் டுக்கெட் அதிரடியாக விளையாடி சதமடித்து 133* (118) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு தனி ஒருவனாக சவாலை கொடுத்து வருகிறார். அதனால் இந்தியாவை விட இன்னும் 238 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ள அந்த அணியிடம் 8 விக்கெட்டுகள் கைவசம் இருப்பதால் இந்திய ரசிகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

- Advertisement -

அடி வாங்கும் இந்தியா:
சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல இத்தொடரில் அதிரடியாக விளையாடி இந்தியாவை தோற்கடிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து முதலிரண்டு போட்டிகளில் சற்று தடுமாற்றமாகவே பேட்டிங் செய்தது. ஆனால் இந்த போட்டியில் பென் டக்கெட் உண்மையான பஸ்பால் ஆட்டத்தை விளையாடி இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் இப்போட்டியில் 500 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் தடுமாற்றமாக பந்து வீசும் அளவுக்கு பென் டக்கெட் அதிரடியாக விளையாடுவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பாராட்டியுள்ளார். எனவே அவரை அவுட்டாக்க நினைக்காமல் உங்களுடைய சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தினாலே விக்கெட் தாமாக கிடைக்கும் என்று இந்திய பவுலர்களுக்கு ஆலோசனை தெரிவிக்கும் குக் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இதே போல நாளை சில மணி நேரங்கள் இங்கிலாந்து விளையாடினால் இந்தியாவை முந்தி விடுவார்கள். அவர்கள் உணவு இடைவெளிக்கு முன்பு 450 ரன்களை தொடாமல் போனாலும் 400 ரன்கள் தொடுவார்கள். குறிப்பாக டக்கெட் இதே போல விளையாடினால் இந்தியா மிகப்பெரிய அழுத்தத்தை சந்திக்கும். எனவே இந்தியா சிறப்பாக பந்து வீச வேண்டும்”

“அவர்கள் டக்கெட் விக்கெட்டை எடுக்க சேசிங் செய்யக்கூடாது. அவருக்கு எதிராக சிறந்த பந்தை வீச வேண்டும். ஏனெனில் 500 விக்கெட்டுகளை எடுத்த அஸ்வின் கூட தமக்கு எதிராக எங்கே பந்து வீச வேண்டும் என்று தெரியாமல் திணறும் அளவுக்கு டக்கெட் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக அந்த ஸ்வீப் ஷாட்டுகளை அடிக்கும் அவருடைய திறமை இந்த உலகிற்கு அப்பாற்பட்டது”

இதையும் படிங்க: இப்படியா கேப்டன்ஷிப் பண்ணுவீங்க.. ரோஹித் சர்மாவை விளாசும் ரசிகர்கள்.. அஸ்வினும் அதிருப்தி.. காரணம் என்ன?

“இந்தியா ஃபீல்டர்களை எங்கே நிறுத்தினாலும் அவர் காலியான இடத்தில் அடிக்கிறார். இதை அவர் எப்படி செய்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். அந்த வகையில் இங்கிலாந்து இயற்கையான பஸ்பால் ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் தற்சமயத்தில் இந்தியா பதற்றமடைந்துள்ளதாக நான் கருதுகிறேன்” எனக் கூறினார்.

Advertisement