இப்படியா கேப்டன்ஷிப் பண்ணுவீங்க.. ரோஹித் சர்மாவை விளாசும் ரசிகர்கள்.. அஸ்வினும் அதிருப்தி.. காரணம் என்ன?

Rohit Sharma and Ashwin
- Advertisement -

ராஜ்கோட் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 131 ரவீந்திர ஜடேஜா 112, சர்பாராஸ் கான் 62 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 15, ஓலி போப் 39 ரன்களில் அவுட்டானார்கள்.

ஆனால் அவர்களுக்கும் சேர்த்து இந்திய பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கிய பென் டக்கெட் 88 பந்துகளில் சதமடித்து இதுவரை 133* (118) ரன்கள் குவித்து தனி ஒருவனாக சவாலை கொடுத்து வருகிறார். அவருடைய அதிரடியால் இரண்டாவது நாள் முடிவில் 207/2 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்து இன்னும் 238 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளதால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

- Advertisement -

சுமாரான கேப்டன்ஷிப்:
முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களை அதிக முறை அவுட்டாக்கிய பவுலர் என்ற உலக சாதனையை அஸ்வின் படைத்துள்ளதை அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் இதுவரை அஸ்வினுக்கு எதிராக விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் பென் டக்கெட் 5 முறை அவுட்டாகியுள்ளார்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த போட்டியில் இடது கை பேட்ஸ்மேனான பென் டக்கெட் துவக்க வீரராக களமிறங்கியதும் அஸ்வினை கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதை செய்யாத ரோகித் சர்மா ஆரம்பத்தில் பும்ரா, சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பென் டக்கெட் 60 – 70 ரன்கள் எடுத்து நன்கு செட்டிலான பின் அஸ்வினை பந்து வீச அழைத்தார்.

- Advertisement -

எனவே ஒருவேளை ஆரம்பத்திலேயே அஸ்வினை பயன்படுத்தியிருந்தால் பென் டக்கெட் முன்கூட்டியே அவுட்டாக வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என்று கருதும் ரசிகர்கள் “இப்படியா கேப்டன்ஷிப் செய்வீங்க” என ரோகித் மீது சமூகவலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சொல்லப்போனால் அஸ்வினும் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “உண்மையாக பென் டக்கெட் 0 ரன்களில் இருந்த போது நான் பந்து வீச விரும்பினேன்”

இதையும் படிங்க: நானும் உங்ககிட்ட கத்துக்கிறேன்.. அஷ்வினுக்கு வீடியோ போட்டு வாழ்த்து தெரிவித்த நேதன் லயன்

“60 – 70 ரன்கள் எடுத்த பின் அல்ல. ஏனெனில் 60 – 70 ரன்கள் எடுத் தபின் அவர் பந்து வீசுவதற்கு மிகவும் கடினமான வீரராக விளையாடினார். அவர் அடித்த சில ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டுகள் ஸ்பெஷலாக இருந்தது. இங்கிலாந்துக்காக அபாரமான வீரராக செயல்பட்ட அவர் இன்று நல்ல சதமடித்தார். அதற்காக அவருக்கு நான் கை கைதட்டி பாராட்டு கொடுக்க விரும்பினாலும் செய்ய மாட்டேன். அடுத்த முறை அவரை நான் சாய்க்க முயற்சிப்பேன்” என்று கூறினார்.

Advertisement