நானும் உங்ககிட்ட கத்துக்கிறேன்.. அஷ்வினுக்கு வீடியோ போட்டு வாழ்த்து தெரிவித்த நேதன் லயன்

Nathan Lyon
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் வென்ற இந்தியா தொடரை சமன் செய்தது. அந்த நிலையில் இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 445 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112 சப்ராஸ்கான் 62 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 15, ஓலி போப் 39 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி 133* (118) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

லயன் பாராட்டு:
அதனால் இரண்டாவது நாள் முடிவில் 207/2 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்து இன்னும் 232 ரன்கள் மட்டுமே பின் தங்கியுள்ளது. முன்னதாக இந்த போட்டியில் ஜாக் கிராவ்லி விக்கெட்டை எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது இந்திய வீரர் மற்றும் முதல் இந்திய ஆஃப் ஸ்பின்னர் என்ற சாதனையை படைத்தார்.

மேலும் 184 இன்னிங்சில் 500 விக்கெட்களை எடுத்த அவர் அனில் கும்ப்ளேவை முந்தி வேகமாக 500 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். அத்துடன் உலக அளவில் முத்தையா முரளிதரனுக்கு பின் அதிவேகமாக 500 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது வீரர் என்ற வரலாறும் அஸ்வின் படைத்துள்ளார். அவருக்கு சமீபத்தில் 500 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த ஆஸ்திரேலியாவின் நேதன் லயன் வீடியோ பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“ஹாய் அஷ். 500 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்ததற்காக நான் உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். இந்த அற்புதமான பயணத்தை பார்ப்பது முடியாததாக இருக்கிறது. நீங்கள் விளையாடிய விதத்தில் எனக்கு மரியாதையைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. உங்களுக்கு எதிராக நான் விளையாடுவது ஆச்சரியமாக இருக்கிறது”

இதையும் படிங்க: 3வது போட்டியிலிருந்து அவசரமாக விலகிய அஸ்வின்.. காரணம் என்ன? கடைசி 3 நாட்களில் விளையாடப்போவது யார்?

“அதே சமயம் நானும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்கிறேன். வாழ்த்துக்கள். உங்களுக்கு இன்னும் நிறைய விக்கெட்டுகள் வரும்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட அவசர நிலையால் மூன்றாவது போட்டியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் பாதியிலேயே வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் இந்திய அணிக்கு பின்னடைவாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement